Shubman Gill About Odi Captaincy: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 10 ஆம் தேதி டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் தரமான போட்டியாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், தனது புதிய பொறுப்பை எதிர்கொள்ள ஆரம்பித்த பின்னர் செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்துள்ளார்.
கேப்டன் பதவியில் மாற்றம்
இது தொடர்பாக பேசிய சுப்மன் கில், "இந்த அறிவிப்பு தொடரின் நடுவே வெளியானது. ஆனால் எனக்கு ஓரளவு முன்பே நான் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று அறிவேன்.
ஒருநாள் அணியை வழிநடத்த மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறேன். கடந்த சில மாதங்கள் எனக்கு ஆழமான அனுபவமாக அமைந்துள்ளன. இப்போது எதிர்காலம் என்னென்ன வாய்ப்புகளை தரும் என்பதைக் காண ஆவலுடன் இருக்கிறேன்.
முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றல்
ரோகித் சர்மா நெருக்கடியான சூழலில் அமைதியாக இருந்து வீரர்களுடன் நல்ல உறவை பராமரிப்பார். இதைப் போன்ற பல விஷயங்களை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன். கவனிக்க வேண்டிய ஒன்று என்னவெனில், தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடுவதால் உடல் மற்றும் மனம் இரண்டும் சோர்வு அடைகிறது. அதற்குமீறி, அணியிடம் இருந்து வரவேற்கப்படும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. நாட்டுக்காக வெற்றியைப் பெற வேண்டும் என்பதே எனது கனவு. இந்த சவால்களை எதிர்கொள்ளும் உறுதியுடன் இருக்கிறேன்" என பேசினார்.
எதிர்காலம் மற்றும் இந்திய அணியின் முன்னேற்றம்
சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்றது அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தன. இங்கிலாந்து டெஸ்ட்டின் போதுதான் கேப்டன் பதவி அவருக்கு கிடைத்தது. அப்போது அவர் எப்படி அணியை கையாளப்போகிறார் போன்ற பல கேள்விகள் இருந்தன. ஆனால் தோல்வியின் விழும்பிற்கு சென்ற இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி தொடரை சமன் செய்தார். தற்போது அவரை தேடி ஒருநாள் அணியை வழிநடத்தும் வாய்ப்பு சென்றுள்ளது. சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் அணியையும் வழிநடத்த வேண்டும், இரண்டையும் அவர் எப்படி கையாளபோகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: என்னைய பஸ்ல ஏத்தல.. இதனாலதான் ரோகித் அப்படி செய்தார்.. மனம் திறந்த ஜெய்ஸ்வால்!
மேலும் படிக்க: 20 கிலோ எடை குறைத்து ஆளே மாறிய ரோகித் சர்மா.. மெகா பிளான் போடும் ஹிட்மேன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









