15 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி - இந்திய அணி தோற்க காரணம் என்ன?

IND vs SA 1st Test Highlights: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. 15 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் வெற்றி பெறுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 16, 2025, 03:24 PM IST
  • சைமன் ஹார்மர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்
  • சுப்மான் கில் பேட்டிங் செய்ய வரவில்லை.
  • டெம்பா பவுமா மட்டுமே இப்போட்டியில் அரைசதம் அடித்தார்.
15 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி - இந்திய அணி தோற்க காரணம் என்ன?

IND vs SA 1st Test, Reasons Behind Team India Loss: தென்னாப்பிரிக்கா அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா -  தென்னாப்பிரிக்கா அணிகள் முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் நிலையில்,  அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாட இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (நவ. 14) தொடங்கியது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டி தொடங்கி இரண்டரை நாள்களில் தற்போது நிறைவடைந்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

IND vs SA 1st Test: 15 ஆண்டுகளில் முதல் வெற்றி

இந்திய மண்ணில் கடைசியாக 2010ஆம் ஆண்டு நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. இந்திய அணி 13 ஆண்டுகள் கழித்து ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியை இழந்திருக்கிறது. கடந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியா இழந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா தோற்றிருக்கிறது. அதாவது இந்திய மண்ணில் இந்தியா கடைசியாக விளையாடி 6 டெஸ்ட் போட்டிகளில் 4இல் தோற்றிருக்கிறது.

IND vs SA 1st Test: சைமன் ஹார்மர் ஆட்ட நாயகன்   

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 159 ரன்களை அடித்த நிலையில், இந்தியா 189 ரன்களை அடித்தது. 30 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை நேற்று தொடங்கிய  நிலையில், இன்று காலையில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 124 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தேநீர் இடைவேளைக்கு முன் 93 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய மிடில் ஆர்டரை நிலைகுலையச் செய்த சைமன் ஹார்மர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவர் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

IND vs SA 1st Test: இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய அணியின் தோல்விக்கு மூன்று முக்கிய காரணங்களைச் சொல்லலாம். முதல் காரணம், சுப்மான் கில் விளையாடாதது. கில் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களை அடித்து கழுத்து வலி காரணமாக ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவர் அடுத்து இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்யவில்லை. இந்திய அணி வெறும் 10 வீரர்களுடன் விளையாடியது. ஒருவேளை சுப்மான் கில் இருந்திருந்தால் அவர் இரண்டு இன்னிங்ஸிலும் 15 ரன்களை அடித்திருந்தால் கூட இந்தியா தற்போது வெற்றி பெற்றிருக்க முடியும். 

இரண்டாவது, இந்திய அணி பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் உள்ளிட்டவற்றை விளையாடாததை சொல்லலாம். ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் பட்டேல் என டாப் 8 பேட்டர்களில் 5 பேர் இடது கை பேட்டர்கள். இதனாலேயே, ஆப் ஸ்பின்னர் சைமன் ஹார்மர் அதிக விக்கெட்டுகளை எடுத்து தாக்கம் செலுத்தினார். இடது கை பேட்டர்களுக்கு வெளியே செல்லும் பந்தை வீசும் திறன் பெற்ற அவர், இடது கை பேட்டருக்கு விரைவாக ஸ்டம்பை நோக்கி வரும் பந்தையும் வீச முடிகிறது. இவருக்கு எதிராக விளையாட நல்ல ஸ்வீப் விளையாடும் வீரர் இல்லாததும் தோல்விக்கு காரணம். இவர் கைப்பற்றிய 8 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகள் இடது கை பேட்டர்கள்தான் என்பது கவனிக்கத்தக்கது.

அக்சர் படேலுக்கு பதில் ஒரு பேட்டரை இந்திய அணி விளையாடாதது மூன்றாவது காரணம் எனலாம். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் என மூன்று ஸ்பின்னர்கள் ஏற்கெனவே இருக்கும்போது கூடுதலாக அக்சர் பட்டேலை எடுத்தது சரியல்ல. நம்பர் 3 இடத்தில் சாய் சுதர்சனும், பின்வரிசையில் வாஷிங்டன் சுந்தரும் விளையாடியிருக்கலாம். வாஷிங்டன் சுந்தர் நம்பர் 3இல் சிறப்பாக விளையாடினாலும் சாய் சுதர்சனுக்கு இன்னும் சில வாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும். இந்தச் சூழலில் கூடுதல் பேட்டரை விளையாடுவது முக்கியம்.

மேலும் படிக்க | அடுத்த டெஸ்ட்டில் சுப்மன் கில் விளையாட மாட்டார்? அவருக்கு பதில் இந்த வீரர்தான்!

மேலும் படிக்க | IND vs SA: மைதானத்தில் இருந்து பாதியில் வெளியேறிய சுப்மன் கில்! என்ன ஆனது?

மேலும் படிக்க | ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்தும் வேஸ்ட்... இந்திய அணியில் இடம்பெறுவது கஷ்டம் - ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News