South Africa World Test Champions: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது, தென்னாப்பிரிக்கா அணி. 27 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன் கடைசியாக 1998ஆம் ஆண்டில் ஐசிசி நாக்-அவுட் டிராபியை தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது.\
WTC Finals: 21 அரையிறுதி போட்டிகள், 4 இறுதிப்போட்டிகள்...
தென்னாப்பிரிக்கா அணி இதுவரை ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி உலகக் கோப்பை உள்ளிட்ட ஐசிசி டைட்டில்களை வென்றதே இல்லை. அப்படியிருக்க, தற்போது முதல்முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென்னாப்பிரிக்கா அணி வென்றுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு பிறகு மூன்றாவது டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற நாடே தென்னாப்பிரிக்கா தான்.
1975ஆண்டு முதல் ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், இனவெறி பிரச்னைகள் காரணமாக ஐசிசி உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டு 1992ஆம் ஆண்டில்தான் ஐசிசி உலகக் கோப்பைக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதிபெற்றது. அதில் இருந்து ஆடவர் மற்றும் மகளிர் தென்னாப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக பல ஐசிசி தொடர்களில், ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் விளையாடி உள்ளன. ஆனால், 1998 ஐசிசி நாக்அவுட் டிராபியை தவிர்த்து தென்னாப்பிரிக்கா ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. அதாவது இதற்கு முன் 21 அரையிறுதிப் போட்டிகளிலும், 4 இறுதிப்போட்டிகளிலும் போராடி தற்போது இந்த ஐசிசி கோப்பையை தென்னாப்பிரிக்கா தட்டித்தூக்கி உள்ளது.
WTC Finals: ஆட்ட நாயகன் எய்டன் மார்க்ரம்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 282 ரன்கள் என்ற பெரிய இலக்கை எய்டன் மார்க்ரம் - டெம்பா பவுமா ஜோடி எளிதாக்கியது. எய்டன் மார்க்ரம் 136 ரன்கள், பவுமா 66 ரன்கள் வெற்றிக்கு பெரும் பங்களிப்பாக இருந்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா 9 விக்கெட்டுகளை கைப்பற்றி சாம்பியன்ஷிப்பை வெல்ல பேரூதவியாக இருந்தார்.
WTC Finals: Chokers to Champions
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறை தென்னாப்பிரிக்கா வென்றிருக்கிறது. மார்க்ரம் 136 ரன்களை அடித்தது மட்டுமின்றி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதைத் தொடர்ந்து இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக அவர் தேர்வு செய்யப்பட்டார். 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி இந்த இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றது. தென்னாப்பிரிக்கா அணிக்கு Chokers என்றிருந்த பெயர் இப்போதிருந்து Champions என மாறியிருக்கிறது. நிச்சயம் இது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலும் சிறப்பான நாளாகும்.
மேலும் படிக்க | சுத்தமா பிடிக்கல.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய செளரவ் கங்குலி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ