சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையப்போகும் மெகா அதிரடி பிளேயர்..!

Dewald Brevis, Chennai Super Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரீவிஸ் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 18, 2025, 03:14 PM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா பிளான்
  • சிஎஸ்கேவில் இணையும் அதிரடி பிளேயர்
  • யாரை நீக்கப்போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையப்போகும் மெகா அதிரடி பிளேயர்..!

Dewald Brevis CSK : ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை சிறப்பாக விளையாடவில்லை. தோனி கேப்டனாக பொறுப்பேற்றவுடன் 2 போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி தோல்விகளை பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் 5 அல்லது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இதனை கருத்தில் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்களில் டாப் ஆர்டரை வலுப்படுத்த ஸ்கெட்ச் போட்டு வருகிறது. ஏனென்றால் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி ஆகியோர் எதிர்பார்த்தளவுக்கு விளையாடவில்லை. அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டதால் இப்போது சிஎஸ்கே இளம் பிளேயர்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.

Add Zee News as a Preferred Source

அதேநேரத்தில் புதிய பிளேயர்களை அணிக்குள் கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. ஏற்கனவே மும்பை இளம் பிளேயர் ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெளிநாட்டு பிளேயருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்தது. இந்த சூழலில் தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரீவிஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு மஞ்சள் நிறத்திலான போட்டோவை அப்லோடு செய்திருக்கிறார். அதில் அவர் எந்த கேப்சனும் போடவில்லை என்றாலும் சிஎஸ்கே அணியுடன் அவர் இணைய உள்ளதை சூசகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கொளுத்தி போட்டுள்ளனர்.

டெவால்ட் ப்ரீவிஸ் இளம் அதிரடி பேட்ஸ்மேன், கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். எதிர்பார்த்தளவுக்கு சிறப்பாக ஆடவில்லை என்பதால் அவரை அணியில் இருந்து விடுவித்தது மும்பை. இந்த முறை எந்த ஐபிஎல் அணியிலும் டெவால்ட் ப்ரீவிஸ் இடம்பெறவில்லை. இந்த சூழலில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் கலர் புகைப்படத்தை அப்லோடு செய்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவர் விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் சோஷியல் மீடியாவில் ரெக்கைகட்டி பறக்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடத்தை மாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும், இளம் பிளேயர்களை எல்லா போட்டிகளிலும் பயன்படுத்த முடியாது என்பதில் தெளிவாக இருக்கும் சிஎஸ்கே, அனுபவம் வாய்ந்த பிளேயர் ஒருவரை அணிக்குள் கொண்டு வருவதற்கான சந்தர்பத்தை எதிர்நோக்கியுள்ளது. அந்த வழியில் டெவால்ட் ப்ரீவிஸ் சிஎஸ்கே அணியில் இணையவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. 

மேலும் படிக்க | IPL: அஸ்வினுக்கு அடுத்து நீக்கப்படப்போகும் இந்த 2 பேர்... CSK-வின் சரவெடி பேட்டிங் ஆர்டர்

மேலும் படிக்க | சிஎஸ்கே-வின் பிளே ஆப் கனவுக்கு ஆப்பு? இது அவசியம்.. என்ன செய்யப்போகிறார் தோனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News