ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் இருவருக்கும் சவுக்கடி கொடுத்த சுனில் கவாஸ்கர்..!

Rohit Sharma : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தாலும் கேப்டன் ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 7, 2025, 01:43 PM IST
  • ரோகித் சர்மா மீது கவாஸ்கர் விமர்சனம்
  • அவர் ஒழுங்காக பேட்டிங் ஆடுவதே இல்லை
  • பேட்டிங் அணுகுமுறையை ரோகித் மாற்ற வேண்டும்
ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் இருவருக்கும் சவுக்கடி கொடுத்த சுனில் கவாஸ்கர்..!

Sunil Gavaskar Slams Rohit Sharma : இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் 9 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் சாம்பியன்ஸ் கோப்பைக்காக விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு முக்கியமான அறிவுரையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வழங்கியுள்ளார். ரோகித்சர்மா பேட்டிங் ஒழுங்காக விளையாடவில்லை, அவருடைய மோசமான பார்ம் தொடர்ந்து கொண்டிருக்கிறது, இது குறித்து அணி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அவருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

ரோகித் சர்மா மோசமான பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா இதுவரை சொல்லும்படியான ஒரு இன்னிங்ஸ் கூட விளையாடவில்லை. தொடர்ந்து மோசமாக விளையாடிக் கொண்டிருக்கும் அவர், தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையில் கட்டாயம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, " ரோகித் சர்மா கடந்த 2 ஆண்டுகளாக அதிரடி ஆட்டத்தை விளையாட முயற்சிக்கிறார். ஆனால் அவரின் அணுகுமுறை ஒரு சில போட்டிகளை தவிர பெரிதாக இந்திய அணிக்கு உதவ வில்லை. மோசமான பார்மில் அவர் ஆடிக் கொண்டிருக்கிறார். அதனால் ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெரிய இன்னிங்ஸ் தேவை

குறைந்தபட்சம் 25 ஓவர்களாவது அவர் விளையாட முயற்சிக்க வேண்டும். வெறும் 20, 30 ரன்களுக்கு அவுட்டாவதை வாடிக்கையாக கொள்ள கூடாது. அந்த ரன்களில் பெரிதாக சாதித்துவிட்டதுபோல் உணரக்கூடாது. ஒருநாள் போட்டி பார்மேட்டில் நிலைத்து நின்று விளையாடுவது தான் அணிக்கு பெரும் உதவியாக இருக்கும். இதனை பயிற்சியாளர் கம்பீர் கவனத்தில் கொண்டதுபோல் தெரியவில்லை. மாறாக ரோகித் சர்மா அணுகுமுறைக்கு அவர் சப்போர்ட் செய்துகொண்டிருக்கிறார். என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தன்னுடைய திறமைக்கு ஏற்ற அளவில் விளையாடவில்லை என்றே கூறுவேன். அவர் 25, 30 ஓவர்கள் ஆடினால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடிக்கும். முதல் பேட்டிங் மற்றும் சேஸிங் என எதுவாக இருந்தாலும் இந்திய அணிக்கு சுபலமாக இருக்கும். அதனை ரோகித் செய்வது போல தெரியவில்லை" என காட்டமாக விமர்சித்துள்ளார்.

தேவையில்லாத பிளேயர்

ஒரு பிளேயராக ரோகித் சர்மா அணிக்கு போதுமான பங்களிப்பை கொடுப்பதில்லை என ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். இதனால் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | ind vs nz: இறுதி போட்டியில் யாருக்கு வெற்றி.. அம்பத்தி ராயுடு கணிப்பு

மேலும் படிக்க |  ஸ்மித்தை தொடர்ந்து இந்த நட்சத்திர வீரரும் ஓய்வு அறிவிப்பு...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News