IPL 2025, SRH vs RR: ஐபிஎல் 2025 தொடர் நேற்றுதான் தொடங்கியது. ஆனால், இரண்டாம் நாளான இன்றே அதன் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது எனலாம். இன்று இரவு சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி மீதுதான் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
SRH vs RR: ராஜஸ்தான் செய்த பெரிய தவறு
ஆனால், ஹைதராபாத் நகரில் இன்று மதியம் தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் குதூகலத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அப்போதே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியது என்னவென்றால் சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங்கில் அசைக்க முடியாத அணியாக இருந்துள்ளது என்றும் அதுவும் மதியம் நடைபெறும் போட்டியில் முதல் பேட்டிங் வாய்ப்பை தவறவிடுவது பெரிய தவறு என்றும் கூறப்பட்டது. அதுதான் இன்றும் நடந்தது.
SRH vs RR: ஆரம்பத்தில் இருந்த அதிரடி
ஓப்பனர்கள் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை இந்த முறையும் அதிரடியுடன் தொடங்கி 45 ரன்களை குவித்து, முதல் விக்கெட்டை இழந்தது. அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நான்காவது ஓவரில் வந்த இஷான் கிஷன் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியை தொடங்கினார். டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு எஸ்ஆர்ஹெச் 94 ரன்களை குவித்து மிரட்டியது.
SRH vs RR: ஹெட் அரைசதம்... NKR, கிளாசென் அதிரடி!
12வது ஓவரிலேயே 150 ரன்களை தாண்டியது. அந்த நேரத்தில் 15வது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 67 ரன்களை அடித்திருந்தார். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி 15 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களுடன் 30 ரன்களுடனும், ஹென்ரிச் கிளாசென் 14 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
SRH vs RR: இஷான் கிஷன் மிரட்டல் சதம்
இருப்பினும் மறுமுனையில் இஷான் கிஷன் 45 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். கடைசி ஓவரில் அனிகெத் வர்மா 7, அபினவ் மனோகர் டக்அவுட்டானார்கள். இதன்மூலம், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை அடித்தது. இஷான் கிஷன் 47 பந்துகளில் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர் உள்பட 106 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் 3.4 ஓவர்களில் 50 ரன்களையும், 6.4 ஓவர்களில் 100 ரன்களையும், 11.2 ஓவர்களில் 150 ரன்களையும், 14.1 ஓவர்களில் 200 ரன்களையும், 17.4 ஓவர்களில் 250 ரன்களையும் அடித்தது குறிப்பிடத்தக்கது.
A special first for Ishan Kishan as he brought up hi
Updates https://t.co/ltVZAvInEG#SRHvRR | @SunRisers | @ishankishan51 pic.twitter.com/8n92H58XbK
— IndianPremierLeague (@IPL) March 23, 2025
SRH vs RR: பெரிய சாதனை ஜஸ்ட் மிஸ்
ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த சாதனையை எஸ்ஆர்ஹெச் அணியே வைத்திருக்கிறது. கடந்தாண்டு ஆர்சிபிக்கு எதிராக 287 ரன்களை அடித்திருந்த நிலையில் இன்று இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் அந்த சாதனையை தகர்க்கும் வாய்ப்பை ஹைதராபாத் அணி தவறவிட்டது எனலாம். இருப்பினும், ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
SRH vs RR: 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
287 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் இழப்பிற்கு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 242 ரன்களை அடித்தது. இதனால், எஸ்ஆர்ஹெச் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 66, துருவ் ஜூரேல் 72, ஷிம்ரோன் ஹெட்மயர் 42 ரன்களை எடுத்தனர்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் எதிரணிக்கு பயத்தை காட்டப்போகும் இந்த 5 பவுலர்கள்!
மேலும் படிக்க | தோனி குறித்த கேள்வி... விழுந்து விழுந்து சிரித்த சூர்யகுமார் யாதவ்... என்ன மேட்டர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ