சிஎஸ்கே நல்ல வீரர்களை வாங்கவில்லை.. ரூ. 120 கோடியை வீணடித்துவிட்டது - புலம்பும் சுரேஷ் ரெய்னா!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வரும் நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரர் ரெய்னா விமர்சித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Apr 21, 2025, 04:17 PM IST
  • நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிக மோசமாக விளையாடி வருகிறது
  • இந்த நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விமர்சித்துள்ளார்
சிஎஸ்கே நல்ல வீரர்களை வாங்கவில்லை.. ரூ. 120 கோடியை வீணடித்துவிட்டது - புலம்பும் சுரேஷ் ரெய்னா!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இதற்கு சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் செய்த தவறு என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் டெவோன் கான்வேவை ரூ. 6.25 கோடிக்கும் ராகுல் திரிபாதியை ரூ. 3.4 கோடிக்கும் ரச்சின் ரவீந்திராவை ரூ. 4 கோடிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கும் கலீல் அகமதை ரூ. 4.8 கோடிக்கும் நூர் அகமதை ரூ. 10 கோடிக்கும் வாங்கியது. இதில் நூர் அகமது மற்றும் கலீல் அகமது மட்டுமே நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். மற்ற எந்த வீரர்களும் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, சென்னை அணி ஏலத்தில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் கூறுகையில், நீங்கள் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல் போன்றவர்களை விட்டுவிட்டீர்கள். அணி நிர்வாகம் மற்றும் தலைமை பயிற்சியாளரும் நல்ல வீரர்களை வாங்க முயற்சி செய்யவில்லை. 

சிறப்பாக விளையாடும் பல வீரர்கள் இருந்தும் சென்னை அணி அவர்களை வாங்கவில்லை. தங்களிடம் அதிக பணம் இருந்தும் சென்னை அணி அதை செய்யவில்லை. இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்படி தடுமாறியதை பார்த்ததே இல்லை என சுரேஷ் ரெய்னா கூறினார். 

மெகா ஏலத்திற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 65 கோடிக்கு ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, தோனி, துபே மற்றும் பதிரானாவை தக்க வைத்து இருந்தது. ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ. 120 கோடி அளிப்பட்ட நிலையில், அதில் ரூ. 65 கோடியில் சென்னை அணி வீரர்களை தக்க வைத்தது. மீதமுள்ள ரூ. 55 கோடியை வைத்து தான் மற்ற வீரர்களை சென்னை அணி ஏலத்தில் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: இந்த 4 வீரர்களை சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!

மேலும் படிங்க: ஆத்தாடி! ஐபிஎல் சியர் கேர்ள்ஸ்க்கு வழங்கப்படும் சம்பளம் இவ்வளவா? அதுவும் ஒரு மேட்ச்சுக்கு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News