t20 கிரிக்கெட் போட்டிகளில் 8000 ரன்கள் குவித்த சுரேஷ் ரெய்னா!
t20 கிரிக்கெட் போட்டிகளில் 8000 ரன்கள் குவித்து ‘8000 ரன்கள் குவித்த முதல் இந்தியர்’ என்னும் பெருமையை பெற்றுள்ளார்!
t20 கிரிக்கெட் போட்டிகளில் 8000 ரன்கள் குவித்து ‘8000 ரன்கள் குவித்த முதல் இந்தியர்’ என்னும் பெருமையை பெற்றுள்ளார்!
BCCI சார்பில் நடைப்பெற்று வரும் சையது முஸ்தாக் அலி கோப்பையில் பங்கேற்று விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, புதுச்சேரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் குவித்ததன் மூலம் t20 போட்டிகளில் 8000 ரன்கள் குவித்த முதல் இந்தியர் என்னும் பெருமையை பெற்றுள்ளார்.
32-வயது ஆகும் இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் தற்போது டி20 போட்டிகளில் மொத்தமாக 8001 ரன்கள் குவித்துள்ளார். 300 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ரன்களை 33.47 சராசரியில் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 4 சதம் மற்றும் 48 அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டி20 போட்டிகளில் அதிக ரன்கள்’ கடந்த வீரர் என்ற வரிசையில் தற்போது ரெய்னாவிற்கு அடுத்தப்படியாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி 7833 ரன்களுடன் காத்திருக்கின்றார்.
உகல அளவிலான அணிகளை பொருத்தமட்டில் இப்பட்டியலில் மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெயில் 12298 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியின் ப்ரென்டோ மெக்களம் 9922 ரன்களுடனும், கிறன் பொல்லார்ட், சொயிப் மாலிக் மற்றும் டேவிட் வார்ணர் முறையே 8838, 8603 மற்றும் 8111 ரன்களுடன் முதல் 5 இடங்களை தக்கவைத்துள்ளனர்.
இப்போட்டியில் அதிக ரன் அடித்த பெருமையை மட்டும் ரெய்னா பெற்றுவிடவில்லை, 300 டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையினையும் ரெய்னா பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக ரோகித் ஷர்மா இந்த சாதனையை தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.