ஐசிசி டி20 உலகக்கோப்பை: தோற்ற அணிக்கும் இத்தனை கோடி பரிசா?

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.   

Written by - RK Spark | Last Updated : Mar 8, 2026, 04:43 PM IST
  • டி20 உலகக்கோப்பையில்..
  • கொட்டும் பரிசு மழை..
  • இத்தனை கோடிகளா? முழு விவரம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தோற்ற அணிக்கும் இத்தனை கோடி பரிசா?

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை 2026 இறுதி போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இன்று நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் மூன்று முறை டி20 உலக கோப்பை வென்ற ஒரே அணி என்ற மகத்தான சாதனையை பெறும். இந்த சாதனையைத் தாண்டி டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ஐசிசி மிகப்பெரிய பரிசு தொகையும் அறிவித்துள்ளது. வெற்றி பெற அணிக்கு ஐசிசி என்ன மாதிரியான பரிசுகளை தரப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | வருணுக்கு பதில் குல்தீப் வேண்டாம்... இந்த வீரர் வந்தால் இந்திய அணிக்கு கோப்பை உறுதி

ஐசிசியின் பரிசுத் தொகை எவ்வளவு?

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற அணிக்கு கொடுக்கப்பட்ட பரிசு தொகையை விட, இந்த ஆண்டு கொடுக்கப்படும் பரிசுத் தொகையின் மதிப்பு 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த முறை டி20 உலக  கோப்பை தொடரின் ஒட்டுமொத்த பரிசு தொகையாக 13.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 120 கோடியாகும். இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டி இந்தியா அல்லது நியூசிலாந்து என எந்த அணி வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக கொடுக்கப்படும். அதாவது இந்திய மதிப்பு சுமார் 27.48 கோடி பரிசு தொகையாக கிடைக்கும். மேலும் இறுதிப்போட்டியில் தோல்வி அடையும் அணிக்கும் மிகப்பெரிய பரிசு தொகை காத்திருக்கிறது. தோல்வி அடையும் அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 14.65 கோடி ஆறுதல் பரிசாக கிடைக்கும். 

அரை இறுதியில் தோற்ற அணிகளுக்கு எவ்வளவு கிடைக்கும்?

அரை இறுதியில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தது. இதில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் அரை இறுதியில் தோற்ற அணிகளுக்கும் ஐசிசி மிகப்பெரிய பரிசு தொகையை வழங்குகிறது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க ஆகிய அணிகளுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 7.24 கோடி ஐசிசி பரிசு  தொகையாக வழங்கியுள்ளது. 

மற்ற அணிகளுக்கு எவ்வளவு பரிசு தொகை? 

அரையிறுதிக்கு தகுதி பெறாமல் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய இலங்கை, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகளுக்கும் இந்திய மதிப்பில் சுமார் 3.48 கோடி ஐசிசி பரிசாக வழங்கும். மேலும் குரூப் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்கு இந்திய மதிப்பில் சுமார் 2.29 கோடி பரிசாக கிடைக்கும். ஐசிசி தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இவ்வளவு பெரிய பரிசு தொகை கிடைப்பது கிரிக்கெட் வட்டாரத்தை திரும்பிய பார்க்க வைத்துள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், அந்த அணிக்கு ஐசிசி வழங்கும் பரிசு தொகையை தாண்டி அந்த நாட்டு அரசு மிகப்பெரிய பரிசு தொகையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், முகமது சிராஜ்.

நியூசிலாந்து அணி:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி, கைல் ஜேமிசன், கோல் மெக்கோன்சி.

மேலும் படிக்க | அகமதாபாத் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்திய அணிக்கு சாதகமான பிட்ச்? - கணிப்புகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News