டி20 உலகக்கோப்பை : அரையிறுதியில் சஞ்சு சாம்சன் மீண்டும் சரவெடி! விராட் கோலி சாதனை சமன்

Sanju Samson : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை கதறவிட்ட சஞ்சு சாம்சன், விராட் கோலி சாதனையும் சமன் செய்தார்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 5, 2026, 09:36 PM IST
  • சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம்
  • மீண்டும் 89 ரன்கள் விளாசினார்
  • விராட் கோலி சாதனையை சமன் செய்தார்
டி20 உலகக்கோப்பை : அரையிறுதியில் சஞ்சு சாம்சன் மீண்டும் சரவெடி! விராட் கோலி சாதனை சமன்

Sanju Samson : வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற பரபரப்பான டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம் ஆடி புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், டி20 உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

வான்கடேவில் சாம்சன் அதிரடி:

மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான நாக் அவுட் போட்டியில், சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சைத் தவிடுபொடியாக்கிய அவர், 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இக்கட்டான சூழலில் களமிறங்கி அவர் ஆடிய இந்த இன்னிங்ஸ் இந்திய அணியை கவுரவமான நிலைக்குக் கொண்டு சென்றது.

விராட் கோலியின் சாதனையைச் சமன் செய்தார்:

இன்றைய போட்டியில் 89 ரன்கள் எடுத்ததன் மூலம், டி20 உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 2016 ஆம் ஆண்டு விராட் கோலி நாட் அவுட்டாக எடுத்த 89 ரன்கள் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார்.

சாம்சனின் கம்பேக்

கடந்த சில ஆண்டுகளாக அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வந்த சஞ்சு சாம்சன், உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரின் நாக்-அவுட் சுற்றில் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதே மும்பை வான்கடே மைதானத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் விராட் கோலி நிகழ்த்திய சாதனையை சாம்சன் எட்டிப்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கொண்டாட்டம்: சஞ்சு சாம்சனின் இந்த ஆட்டத்தால் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடினமான ஆடுகளத்தில் துணிச்சலாக விளையாடி இந்தியாவின் ஸ்கோரை உயர்த்திய சாம்சனுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை நாக்அவுட்டில் அதிக ரன்கள் எடுத்த பிளேயர்கள்

1. ஃபின் ஆலன் (நியூசிலாந்து): 100* ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (கொல்கத்தா, 2026 அரையிறுதி).

2. திலகரத்ன தில்ஷான் (இலங்கை): 96* ரன்கள், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக (ஓவல், 2009 அரையிறுதி).

3. விராட் கோலி (இந்தியா): 89* ரன்கள், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக (மும்பை, 2016 அரையிறுதி).

4. சஞ்சு சாம்சன் (இந்தியா): 89 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக (மும்பை, 2026 அரையிறுதி).

5. அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து): 86* ரன்கள், இந்தியாவுக்கு எதிராக (அடிலெய்டு, 2022 அரையிறுதி).

மேலும் படிக்க: IND vs ENG: இந்திய அணியின் பெரிய பலவீனம்... அரையிறுதியில் தோற்கவும் வாய்ப்பு!

மேலும் படிக்க: புதிய பயிற்சியாளரை நியமித்த CSK.. நிர்வாகம் அதிரடி! ரெய்னா இல்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News