India vs New Zealand T20I Series, Squad Changes Update: இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றிருக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி ஓடிஐ போட்டி நாளை (ஜனவரி 18) மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
IND vs NZ T20I: இந்தியா vs நியூசிலாந்து டி20ஐ தொடர்
ஓடிஐ தொடருக்கு பின் இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராக உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற இருக்கிறது, பிப்ரவரி 7ஆம் தேதி குரூப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக அதற்கு முன் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. வரும் புதன்கிழமை (ஜன. 21) அன்று தொடங்கி ஜன. 31ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
IND vs NZ T20I: தோற்காத இந்திய அணி
நாக்பூர், ராய்ப்பூர், கௌகாத்தி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் என 5 டி20ஐ போட்டிகளும் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறாத மைதானங்களில் நடைபெற இருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி இதுவரை எந்த டி20ஐ தொடரிலும் தோற்றதில்லை. மீண்டும் டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும்.
IND vs NZ T20I: இரு முக்கிய வீரர்களுக்கு காயம்
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தற்போது காயத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். திலக் வர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடரில் முதல் மூன்று போட்டிகளை தவறவிடுகிறார், வாஷிங்டன் சுந்தர் ஒட்டுமொத்தமாக தொடரில் இருந்தே விலகிவிட்டார். திலக் வர்மா காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், வாஷிங்டன் சுந்தர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்தே விலகலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாற்றம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.
IND vs NZ T20I: ஸ்குவாடில் 2 வீரர்கள் சேர்ப்பு
அதேநேரத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடருக்கான இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திலக் வர்மா பங்கேற்காத முதல் மூன்று போட்டிகளுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். திலக் வர்மா மீண்டும் உடற்தகுதி பெற்றுவந்தால் இவர் வெளியேறுவார் என கூறப்படுகிறது. வாஷிங்டன் சுந்தருக்கு பதில் ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளார், இவர் 5 போட்டிகளிலும் இந்திய அணியில் இருப்பார்.
hreyas Iyer & Ravi Bishnoi added to #TeamIndia T20I squad; Washington Sundar ruled out.
Details https://t.co/cNWHX9TOVk#INDvNZ | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) January 16, 2026
IND vs NZ T20I: ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இந்த இரு மாற்றங்களுக்கு பின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்பதே தற்போது பலரின் கேள்வியாக உள்ளது. திலக் வர்மா இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பிரதான வீரராக இருந்தார். வாஷிங்டன் சுந்தர் உள்ளே - வெளியே பாணியில் அணியில் இருந்து வந்தவர்.
இதன்மூலம், ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் மூன்று போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படலாம், ஒருவேளை திலக் வர்மா காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாவிட்டால் இவரை அணியில் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் அதேநேரத்தில், திலக் வர்மாவை போல் இடது கை பேட்டர் மிடில் ஆர்டருக்கு தேவை என்பதால், ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதில் நம்பர் 3இல் இஷான் கிஷனை விளையாடவைக்கவும் வாய்ப்புள்ளது. மறுபுறம், ஏற்கெனவே வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் சுழற்பந்துவீச்சுக்கு இருப்பதால் ரவி பிஷ்னோய் பிளேயிங் லெவனில் இடம்பெற 99% வாய்ப்பில்லை.
மேலும் படிக்க | ரோகித் சர்மாவை அவமானப்படுத்திய கம்பீர்.. மிகப்பெரிய தவறு – முழு விவரம்!
மேலும் படிக்க | ஓய்வை அறிவிக்கும் முக்கிய இந்திய வீரர்... இதுவே அவருக்கு கடைசி தொடர் - முழு பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









