ஜெய்ஸ்வால் உடன் ஓப்பனிங்கில் இவர் தான் இறங்குவார்... சாய் சுதர்சன் கிடையாது!

Team India: இந்திய அணியில் இனி யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங்கில் இந்த வீரர் தான் இறங்குவார் என்பது இன்று உறுதியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 6, 2025, 10:48 PM IST
  • வரும் ஜூன் 20ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
  • தற்போது இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் உடன் மோதுகிறது.
  • இந்திய அணியின் பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.
ஜெய்ஸ்வால் உடன் ஓப்பனிங்கில் இவர் தான் இறங்குவார்... சாய் சுதர்சன் கிடையாது!

India National Cricket Team: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்டது. கிரிக்கெட் ரசிகர்களக்கு சற்று ஓய்வு கிடைத்திருக்கிறது. இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ், இங்கிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் டி20 தொடர், டிஎன்பிஎல் என பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் தற்போது நடைபெறுகிறது என்றாலும் கூட பெரிய எதிர்பார்ப்பு என்பது WTC இறுதிப்போட்டி மீதுதான்.

Add Zee News as a Preferred Source

WTC Final 2025: WTC இறுதிப்போட்டி...

2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 11ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தென்னாப்பிரிக்காவை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியைதான் கிரிக்கெட்  உலகமே தற்சமயம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.

ENG vs IND: இந்தியா ஏ vs இங்கிலாந்து லயன்ஸ் 

இதையடுத்து, இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பலரும் காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில், பிரதான இந்திய ஸ்குவாட் இங்கிலாந்துக்கு வரும் முன்னரே இந்தியா ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது போட்டி இன்று தொடங்கியது. 

இந்த போட்டியில் சுப்மான் கில், சாய் சுதர்சன் இடம்பெறவில்லை. கடந்த போட்டியில் 92 ரன்களை அடித்த சர்ஃபராஸ் கானுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்தது. கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் ஓப்பனிங் இறங்கினர், கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 3வது வீரராக வந்தார். தற்போது 70 ஓவர்கள் முடிவில் 285 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்தியா இழந்துள்ளது. இன்றைய ஆட்டம் முடிய இன்னும் 20 ஓவர்கள் இருக்கிறது.

ENG vs IND: கேஎல் ராகுல் சதம்

ஜெய்ஸ்வால் 17, அபிமன்யூ ஈஸ்வரன் 11 ரன்களை எடுத்து சொதப்பினார்கள். கருண் நாயர் - கேஎல் ராகுல் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 86 ரன்களை எடுத்தது. கடந்த போட்டியில் 200 ரன்களை குவித்த கருண் நாயர் இன்று 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து துருவ் ஜூரேல் உடன் ராகுல் கூட்டணி சேர்ந்தார். கேஎல் ராகுல் சதம் அடித்து தனது பார்மை நிரூபித்தார். 

இந்த ஜோடி 121 ரன்களை எடுத்தபோது துருவ் ஜூரேல் 52 ரனகளில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே கேஎல் ராகுலும் ஆட்டமிழந்தார். அவர் 168 பந்துகளில் 15 பவண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 118 ரன்களை அடித்திருந்தார். தற்சமயம் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

ENG vs IND: துருவ் ஜூரேல் கலக்கல்

இந்த போட்டியில் விளையாடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர், துருவ் ஜூரேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் பிரதான இந்திய ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர். இதில் அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் துருவ் ஜூரேலுக்கு இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். இந்திய ஏ அணியில் துருவ் ஜூரேல் விளையாடிய 3 இன்னிங்ஸில் மூன்று அரைசதங்களை அடித்துள்ளார். எனவே இந்திய அணி இவர் விஷயத்தில் என்ன முடிவை எடுக்கும் என்பதும் கேள்விக்குறிதான். 

ENG vs IND: இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு?

ஓப்பனிங்கில் இன்று கேஎல் ராகுல் காட்டிய பொறுப்பான இன்னிங்ஸின் மூலம் அவர்தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஓப்பனிங்கில் வருவார் என்பது உறுதியாகிவிட்டது. ஜெய்ஸ்வாலுடன் கேஎல் ராகுல் முதல் டெஸ்டில் ஓப்பனிங் இறங்குவார். அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பில்லை. நம்பர் 3, நம்பர் 4, நம்பர் 5 ஆகிய ஸ்பாட்களில் முறையே சாய் சுதர்சன், சுப்மான் கில், கருண் நாயர் ஆகியோருக்கு வாய்ப்புள்ளது. 

ரிஷப் பண்ட், நிதிஷ் குமார்/துருவ் ஜூரேல், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் என நம்பர் 9 வரை பேட்டிங் ஆழம் வைக்க வேண்டும். பும்ரா, சிராஜ் பிரதான பௌலர்களாக இருப்பார்கள். தேவைப்பட்டால் ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைத்து ஒரு வேகப்பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | சுப்மன் கில் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்.. ரிக்கி பாண்டிங்!

மேலும் படிக்க | அவர் இல்லை என்றால் எதுவும் இல்லை.. ரோகித் சர்மா உருக்கம்!

மேலும் படிக்க | விராட் கோலி கைதா? 11 பேர் உயிரிழந்த விவகாரம்.. ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News