Test Twenty Format Rules and Regulations: சர்வதேச அளவில் கிரிக்கெட், டெஸ்ட், ஓடிஐ, டி20ஐ என மூன்று வடிவங்களில் விளையாடப்படுகிறது. அதுவே, உள்ளூர் போட்டிகளில் டி10, The Hundred எனும் 100 பால் போட்டி, Hong Kong Sixes என 6 ஓவர் கொண்ட போட்டி, டென்னிஸ் பால் கிரிக்கெட் என பல்வேறு வகைகளில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது.
Test Twenty: புதிதாக பிறக்கும் டெஸ்ட் டுவென்டி
அந்த வகையில், தற்போது கிரிக்கெட்டின் புதிய வடிவமாக, 'டெஸ்ட் டுவென்டி' (Test Twenty) அறிமுகமாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. டெஸ்ட் போட்டியின் மகத்துவமும், டி20 போட்டியின் விறுவிறுப்பும் இணைந்து கிரிக்கெட்டை உலகம் முழுவதும் கொண்டுச்செல்லும் பொருட்டு இந்த பார்மட் திட்டமிடப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மூன்று பார்மட்களையும் இணைக்கும் புள்ளியாக இருக்கும், இப்போட்டியும் ஒரே நாளில் நடைபெறும்.
Test Twenty: மூத்த வீரர்களும் ஆர்வம்
The One One Six Network நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கௌரவ் பஹிர்வானி 'டெஸ்ட் டுவென்டி' போட்டியின் முன்னெடுப்பை அறிவித்துள்ளார். இது சர்வதேச அளவிற்கு வரும்போது கிரிக்கெட்டின் நான்காவது சர்வதேச பார்மட்டாக அமையும். மேலும், டெஸ்ட் டி20 போட்டிக்கான ஆலோசனை குழுவில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான சர் கிளைவ் லாய்ட், மேத்யூ ஹெய்டன், ஹர்பஜன் சிங், ஏபி டிவில்லியர்ஸ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.
Proud to have launched Test Twenty with @gauravbahirvani . If you’re 13–19 and play with passion, this is your chance. Register: https://t.co/zNFYTDL6lV@The_Test_Twenty @HaydosTweets #clivelloyd @harbhajan_singh #ParitySports #oneonesixnetwork#TestTwenty #FourthFormat pic.twitter.com/FNDYvM6tJf
— AB de Villiers (@ABdeVilliers17) October 16, 2025
இவர்கள் போன்ற சர்வதேச வீரர்களும் இந்த பார்மட்டின் மீது தங்களின் ஆர்வத்தை செலுத்தி உள்ளனர்.'டெஸ்ட் டுவென்டி' போட்டியின் விதிமுறைகள் என்ன?, அவை எப்போது தொடங்கப்பட இருக்கிறது? போன்ற விவரங்களை இங்கு காணலாம்.
'டெஸ்ட் டுவென்டி' என்றால் என்ன?
முன்னர் கூறியது போல், இது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளை இணைக்கும் பார்மட்டமாகும். அதாவது மொத்தம் 80 ஓவர்கள் விளையாடப்படும். இரண்டு அணிகளுக்கும் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்கள் ஒதுக்கப்படும். இதனா, டெஸ்ட் போட்டியை ஒரே நாளில் நடத்தலாம், அதுவும் டி20 போட்டியின் விறுவிறுப்போடும் நடத்தலாம். இது தொலைக்காட்சி பார்வையாளர்களை மட்டுமின்றி, ரசிகர்களை மைதானம் நோக்கியும் அதிகம் இழுக்கும் என கருதப்படுகிறது. கிரிக்கெட்டின் அடிநாதமான டெஸ்ட் கிரிக்கெட்டை இதனால் உலகம் முழுவதும் கொண்ட செல்ல இயலும்.
Test Twenty: திறமைகளை எளிதாக அடையாளம் காணலாம்.
மேலும் டெஸ்ட் டுவென்டி போட்டியில் புத்தம் புதிய செயற்கை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதனால், வீரர்கள் விளையாடுவதை வீடியோ மூலம் ஆய்வு செய்யவும், மோஷன் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவும், தரவுகளை வைத்து ஒரு வீரரின் திறனை அறியவும் முடியும். இதனால், திறமையான வீரர்கள் எவ்வித பாகுபாடுமின்றி கிரிக்கெட்டுக்கு வருவதை உறுதிசெய்யலாம். இது கிரிக்கெட் விளையாடும் நாடுகளில், அதன் அகாடமிகளில், அதன் மாநில சங்கங்களில் பயன்படுத்தப்பட்டு திறமையான வீரர்களை அணிக்குள் எடுக்கலாம். இதனால், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கும் சிறப்பான வீரர்கள் கிடைப்பார்கள்.
Test Twenty: எப்போது முதல்? எத்தனை அணிகள்?
டெஸ்ட் டுவென்டியின் முதல் தொடர் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட உள்ளது. மொத்தம் ஆறு தனியார் அணிகள் விளையாட இருக்கின்றன. இந்திய நகரங்களை அடிப்படையாக வைத்து 3 அணிகளும், துபாய், லண்டன், அமெரிக்கா என மூன்று அணிகளும் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 16 வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள். ஒரு அணியில் 8 இந்திய வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இது சிவப்பு பந்தில் விளையாடப்பட அதிக வாய்ப்புள்ளது.
Test Twenty: ஓடிஐ கிரிக்கெட் அழியும்...!
இந்த தொடர் தற்போது பரிசார்த்த முறையில் நடத்தப்படுகிறது. இது வெற்றிகரமாக மக்களை கவரும்பட்சத்தில் விரைவில் சர்வதேச அளவிற்கு கொண்டு வரப்படலாம். அப்படி, இந்த டெஸ்ட் டுவென்டி கொண்டுவரும்பட்சத்தில் ஒருநாள் போட்டிகள் மீதான ஈர்ப்பு குறைந்துவிடும். டெஸ்ட் மற்றும் டி20க்கு என தனித்தனியாக ரசிகர்கள் இருக்கும் நிலையில், ஓடிஐ கிரிக்கெட் ஒப்பீட்டளவில் சுவாரஸ்யம் குறைவானது என்பதால், அதனை முடிவுக்கு கொண்டுவர கூட ஐசிசி பரிசீலிக்கலாம் என கருதப்படுகிறது. இல்லையெனில், இருதரப்பு போட்டிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, ஓடிஐ போட்டிகள் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் மட்டும் விளையாடப்படும்படியும் விதிகளை மாற்றவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்? வெல்லப்போவது யார்? எந்த வீரர் அதிக ரன் அடிப்பார்?
மேலும் படிக்க | IND vs AUS: ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் ஓய்வை அறிவிக்கும் 4 வீரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









