2025 ஐபிஎல் தொடர் கடந்த ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்தது. இத்தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றனர். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்சி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தனர். அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பிரியன்ஷ் ஆர்யாவை பலரும் பாராட்டினர்.
இந்த நிலையில், முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ப்ரன் சிங் மற்றும் வைபவ் சூர்யவன்சி ஆகியோருக்கு வரும் 2026 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் துவக்க வீரராக இருக்கும் நிலையில், ஏற்கனவே ஜெய்ஸ்வால், கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் துவக்க வீரர்களுக்கான போட்டியில் உள்ளனர்.
இச்சூழலில் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, உலக கோப்பையின் போது எந்த வீரர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும். முழு உடல் தகுதி என்பது உலக கோப்பையில் போது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். எனவே முழு உடல் தகுதி உள்ளவர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என அவர் கூறி உள்ளார்.
வைபவ் சூர்யவன்சியை இந்திய அணியில் சேர்க்க முடியுமா?
ராபின் உத்தப்பா வைபவ் சூர்யவன்சியை கூறி இருக்கிறார். அவருக்கு தற்போது 14 வயதே ஆகிறது. ஐசிசியின் விதிப்படி ஒரு வீரருக்கு 15 வயது ஆக வேண்டும். அப்போதுதான், அந்த வீரரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வைக்க முடியும். தற்போட்து வைபவ் சூர்யவன்சிக்கு 14 வயதுதான் ஆகிறது. 2026 உலக கோப்பை தொடங்கும் முன்னர் அவருக்கு 15 வயது ஆகிவிடும். ஐபிஎல் தொடர் முடிந்த பின்னரே உலக கோப்பை தொடங்கும். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரின் செயல்பாட்டை பொறுத்து அவரை அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவெடுக்கும்.
ராபின் உத்தப்பா குறிப்பிட்ட மூன்று வீரர்களும் ஐபிஎல் தொடரில் எத்தனை ரன்கள் எடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்சி 7 இன்னிங்ஸ் விளையாடி 252 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 206.5 ஆகும். பிரியன்ஷ் ஆர்யா 17 இன்னிங்ஸ்களில் 475 ரன்களை எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 179 ஆகும். மேலும், பிரப்சிம்ரன் சிங் 549 ரன்களை எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 160 ஆகும்.
மேலும் படிங்க: ICC Hall Of Fame பட்டியலில் தல தோனி! கௌரவப்படுத்திய ஐசிசி!
மேலும் படிங்க: அஸ்வின் விளையாட தடை? 30% அபராதம் விதிப்பு...! TNPL-ல் நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ