விருதிமான் சாஹாவுக்கு மிரட்டல்! ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களும் அதிர்ச்சி

Threats to Widdhiman Saha: விளையாட்டு வீரரை ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தற்போது இந்திய அணி வீரர்களை தொடர்ந்து மிரட்டல் விடுப்பது நடந்து வருகிறது -ரவி சாஸ்திரி

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2022, 05:09 PM IST
விருதிமான் சாஹாவுக்கு மிரட்டல்! ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களும் அதிர்ச்சி title=

இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த கிரிக்கெட் சகோதரத்துவமும் ஒன்றுபட்டுள்ளது. தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய விக்கெட் கீப்பருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணி வீரருக்கு பத்திரிக்கையாளர் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பியதை அறிந்து ரவி சாஸ்திரி அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தலையிட வேண்டும் என்று ரவி கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து உடனடியாக பிசிசிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா ட்விட்டரில், "அவருக்கு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டிருந்ததாகவும், அதன் ஸ்கிரீன்ஷாட்டை ட்வீட் செய்துள்ளார். அதில் சஹா கூறுகையில், "இந்த செய்திகள் ஒரு பத்திரிக்கையாளரால் அனுப்பப்பட்டவை" எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ரவி சாஸ்திரி தனது பதிவில் கூறியது:
விளையாட்டு வீரரை ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தற்போது இந்திய அணி வீரர்களை தொடர்ந்து மிரட்டல் விடுப்பது நடந்து வருகிறது. பிசிசிஐ இந்த விஷயத்தை ஆராய்ந்து, வீரரை மிரட்ட முயற்சிப்பது யார் என்பதைக் கண்டறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்திய அணிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் விருத்திமான் சாஹாவிடம் மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து கேட்டறிய வேண்டும். இது மிகவும் தீவிரமான விசியம் எனக்கூறியுள்ளர்.

மேலும் படிக்க: ’ஓய்வு பெற சொல்வதா?’ ராகுல் டிராவிட், கங்குலி மீது விருதிமான் சஹா காட்டம்

விருத்திமான் சாஹா பகிர்ந்த மிரட்டல் ஸ்கிரீன்ஷாட்:
வரவிருக்கும் இந்தியா மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணியில் விருத்திமான் சாஹா சேர்க்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 10 மணிக்குப் பிறகு அவர் ட்விட்டரில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். இதமூலம் பத்திரிக்கையாளர் என்று அழைக்கப்படும் ஒருவரின் தவறான அணுகுமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த ஷாட்டைப் படித்த பிறகு, பத்திரிகையாளர் சாஹாவிடம் பேட்டி எடுக்க கேட்டிருப்பது தெரிகிறது. ஆனால் சாஹாவிடம் இருந்து பதில் வராததால், சாஹாவை இனி பேட்டி எடுக்க மாட்டேன் என மிரட்டல் தொனியில் பத்திரிக்கையாளர் பதில் அனுப்பியுள்ளார். அதன் ஸ்கிரீன்ஷாட்டை ட்விட்டரில் சாஹா பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் தீபக் சாஹர் விளையாடுவாரா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News