குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் 22 பந்தில் வெறும் 19 ரன்களை எடுத்த திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அவரை களத்திலேயே விளாசிய பின்னர் அடுத்த 23 பந்தில் 82 ரன்கள் எடுத்து திலக் அசத்தினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, வீரர் திலக் வர்மாவை களத்தில் வைத்தே கடுமையாக பேசியது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் திலக் வர்மா தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை ஆடி வந்த நிலையில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அதிரடியான ஃபார்முக்கு திரும்பினார். 20, 0, 14, 1 மற்றும் 8 போன்ற சொர்ப்ப ரன்கள் எடுத்து போராடி வந்த திலக், 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்களை விளாசி தனது சிறந்த ஆட்டத்திற்கு திரும்பி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது 6வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இப்போட்டியில் தொடக்க வீரர்களான குயிண்டன் டி காக் 13, டேனிஷ் மாலேவார் 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த சூரியகுமார் யாதவ்வும் 15 ரன்களில் அவுட்டானார். இந்த நிலையில்தான் திலக் வர்மா களத்திற்கு வந்தார். அவருடன் நமன் தீர் ரன்கள் சேர்த்திக்கொண்டிருந்தார். முதலில் மிகவும் மெதுவாக அடிய திலக் 22 பந்துகாலீள் 19 ரன்களை மட்டுமே எடுத்தார். அடுத்த 23 பந்துகளில்தான் அவர் 82 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் எடுத்த 101 ரன்களில் 7 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளும் அடங்கும்.
Tilak Varma-ಗೆ ಹುರಿದುಂಬಿಸುತ್ತಿರುವ Hardik Pandya!
— Star Sports Kannada (@StarSportsKan) April 20, 2026
ವೀಕ್ಷಿಸಿ | #TATAIPL2026 #GTvsMI | LIVE NOW | ನಿಮ್ಮ Star Sports ಕನ್ನಡ & JioHotstar ನಲ್ಲಿ.#TATAIPL pic.twitter.com/0TDzA1kNzM
இந்த நிலையில், திலக் வர்மா 19 ரன்களில் இருந்த போது, அவருடன் களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா அவரை கடுமையாக விளாசி பேசினார். ஆனால் ஹர்திக் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, அதன்பின்னர் திலக் வர்மா அதிரடியான ஆட்டத்தை கையாண்டு சதம் விளாசினார். 45 பந்துகளில் திலக் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.
1) சனத் ஜெயசூர்யா vs சிஎஸ்கே - வான்கடே, 2008 - 45 பந்துகளில் சதம்
2) திலக் வர்மா vs குஜராத் - அகமதாபாத், 2026 - 45 பந்துகளில் சதம்
3) கேமரூன் கிரீன் vs ஹைதராபாத் - வான்கடே, 2023 - 47 பந்துகளில் சதம்
4) சூர்யகுமார் யாத vs குஜராத் - வான்கடே, 2023 - 49 பந்துகளில் சதம்
மும்பை இந்தியன்ஸ் அணி 4 தோல்விகளுக்கு பின்னர் தற்போது வெற்றியை பெற்று உள்ளனர். இது அவர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்திருக்கும். குஜராத் அணியை 100 ரன்களில் ஆல் அவுட் செய்து 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது மும்பை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறி அசத்தி உள்ளது. இதன் மூலம் அவர்களின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். வரும் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் அதனை அவர்களால் உறுதிபடுத்த முடியும். மேலும், மும்பை அணியின் இந்த வெற்றி அவர்களது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
2026 ஐபிஎல்லில் 5 போட்டிகளில் விளையாடி விக்கெட்டையே வீழ்த்தாத ஜஸ்பிரித் பும்ரா, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி தனது விக்கெட் வேட்டையை தொடங்கி உள்ளார்.இதுவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்திருக்கும் எனலாம்.
குஜராத் அணியை மும்பை அணி வீழ்த்தியதற்கு அஷ்வினி குமார் முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இப்போட்டியே அவருக்கு இத்தொடரின் முதல் போட்டி ஆகும். கடந்த 2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமான அவர் அத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த சூழலில், தற்போது ஒரே போட்டியில் 4 விக்கெட்டை வீழ்த்தி தனது தேவையை அணிக்கு உணர்த்தி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. பொதுவாக மும்பை - சென்னை போட்டி என்றாலே ரசிகர்கள் இடையே உற்சாகம் அதிகமாக இருக்கும். இந்த சூழலில், இப்போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளுமே இருப்பதால், சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.
ரோகித் சர்மா, குயின்டன் டி காக் (வாரம்), நமன் திர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேட்ச்), திலக் வர்மா, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், மிட்செல் சான்ட்னர், கிரிஷ் பகத், ஜஸ்பிரித் பும்ரா, ஏஎம் கசன்பர் ராஜ் பாவா, அஸ்வனி குமார், கார்பின் போஷ், மயங்க் ராவத், ரகு சர்மா, ரியான் ரிக்கல்டன், ஷர்துல் தாக்கூர்,தீபக் சாஹர், மயங்க் மார்கண்டே, டிரென்ட் போல்ட், வில் ஜாக்ஸ், ராபின் மின்ஸ், முகமது சலாவுதீன் இசார் டேனிஷ் மாலேவார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ