MIக்கு மாறும் வைபவ் சூர்யவன்ஷி.. ரூ. 30 கோடிக்கு ஏலம்! முழு விவரம்

Vaibhav Sooryavanshi IPL News: 15 வயது சிறுவனாக இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால், உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். தற்போது அவர் 2026 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.   

Written by - R Balaji | Last Updated : Apr 9, 2026, 11:21 AM IST
  • வைபவ் சூர்யவன்சி தற்போது ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்
  • அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் 3 போட்டிகளில் 122 ரன்கள் அடித்துள்ளார்
  • நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 39 ரன்களை 14 பந்தில் குவித்தார்
MIக்கு மாறும் வைபவ் சூர்யவன்ஷி.. ரூ. 30 கோடிக்கு ஏலம்! முழு விவரம்

Vaibhav Sooryavanshi IPL News:இந்திய U19 அணியின் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi). இவர் தனது பேட்டிங்கால் உலகையை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாகி வருகிறது. இதற்கு இவரது பயமற்ற பேட்டிங்கே முக்கிய காரணம். களத்தில் இவர் இருந்தால் சிக்சர்கள் பறப்பது நிச்சயம். நேற்றைய மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் கூட 14 பந்துகளில் 39 ரன்களை எடுத்து அசத்தினார். சர்வதேச வீரர் அனுபவம் நிறைந்த ஜஸ்பிரித் பும்ராவை கூட அவர் விட்டுவைக்கவில்லை. அவரது ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். இதன் காரணமாக அவரது மார்க்கெட் வேல்யூ தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

Add Zee News as a Preferred Source

வைபவ் சூர்யவன்ஷி திறமைய பார்த்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 

2025 ஐபிஎல் (Indian Premier League) தொடருக்கு முன்பாக நடந்த மெகா ஏலத்தின்போது வைபவ் சூர்யவன்ஷி ரூ. 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியால் வாங்கப்பட்டார். U19ல் கலக்கி வந்த இவரின் தறமையை பார்த்து ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி இவரை தேர்வு செய்தது. ராஜ்ஸ்தான் ராயல்ஸ் இவரை மட்டுமல்ல இதற்கு முன்பாக சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் போன்ற திறமையான வீரர்களை தன்வசம் இழுத்தது. ஆனால் அவர்கள் ஜோஸ் பட்லரை விடுத்து தவறு செய்தனர். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடும் வாய்ப்புள்ளது 

இதுபோன்று கோட்டை விடும் வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி வலைத்துப்போடும். அப்படி ஒருவேளை வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவித்தால் மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயமாக குறிவைக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், வைபவ் சூர்யவன்சி வரும் காலகத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என முன்னாள் பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் ஜதீன் பரஞ்சபே கூறியது வைரலாகி வருகிறது. 

ரன்களை குவிக்கும் வைபவ் சூர்யவன்ஷி 

வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) ஐபிஎல்லில் கடந்த ஆண்டு அறிமுகமானார். 7 போட்டிகளில் விளையாடிய அவர் 252 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் ஒரு சதம் மற்றும் அரைசதமும் அடங்கும். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 204 ஆக உள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டிலும் தனது அதிரடியை தொடர்ந்து வருகிறார். இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 122 ரன்களை குவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் 52 ரன்கள், குஜராத் டைட்டனஸ் அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் மற்றும் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 39 ரன்கள் குவித்து பேட்டிங்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 

வைபவ் சூர்யவன்ஷியின் அச்சமற்ற பேட்டிங் 

வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) ரன்களை ஏற்ற இறக்கமாக குவித்து வந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வைபவ் சூர்யவன்சி குறைந்த பந்துகளில் அதிக ரன்களை குவிக்கிறார். அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய உதவியாக உள்ளது. டி20ஜ பொறுத்தவரையில் பவர்ப்ளேவில் ஒரு அணி ரன்களை குவிப்பது மிகவும் முக்கியமானது. அதை வைபவ் சூர்யவன்சி செய்கிறார். இதனால் எளிதாக ஒரு பெரிய டார்க்கெட்டை எதிரணிக்கு நிர்ணயிக்க முடியும். இந்த நிலையில், இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் வருகாலங்களில் விளையாட வாய்ப்புள்ளது என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

வைபவ் சூர்யவன்ஷி 30 கோடி வரை ஏலம் போக வாய்ப்புள்ளது 

மும்பை இந்தியன்ஸ் அணி தான் விட்ட ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) மீண்டும் தனது அணிக்கு இழுத்துக்கொண்டு கேப்டன் பதவியை கொடுத்தது. அதேபோல் வைபவ் சூர்யவன்சி ஏலத்திற்கு வந்தால், அவரை வலைத்துப்போட மும்பை இந்தியன்ஸ் அணி முயற்சிக்கும். அதேசமயம் வைபவ் சூர்யவன்சிக்கு இருக்கும் டிமெண்டுக்கு அவர் ஏலத்திற்கு வந்தால், 30 கோடி ரூபாய் வரை விலைபோக வாய்ப்புள்ளது. இதன் மூலம் வைபவ் சூர்யவன்சி ரிஷப் பண்ட்டின் சாதனையை முறியடித்து வரலாற்றில் புது இடத்தை பிடிப்பார். 

வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) இதுவரை 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 374 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் மற்றும் 1 சதம் அடங்கும். அவரது சராசரி 37.40 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 218 ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி.. மும்பை தொடர் தோல்வி! புள்ளிப்பட்டியலில் சரிவு

மேலும் படிக்க: சிஎஸ்கே அணியின் புதிய ஓப்பனிங் வீரர்கள்? உர்வில் படேல் - சர்பராஸ் கான்?

மேலும் படிக்க: ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் கைது! என்ன காரணம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

About the Author

Trending News