)
நம்மில் பலருக்கு இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை 2025 ஐபிஎல் தொடரின் மூலம் அறிவோம். 14 வயதே ஆன அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் விரைவில் இந்திய அணியில் அறிமுகமாவார் என பலரும் அவரது அதிரடியான ஆட்டத்தை பார்த்து பாராட்டி வந்தனர். இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் வைபவ் சூர்யவன்சி மீது பல்வேறு அதிரடியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
வைபவ் சூர்யவன்சி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்றால், அவரது உடல் இன்னும் மேம்பட வேண்டும் என கூறி உள்ளார். இது தொடர்பாக பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், வைபவ் சூர்யவன்சியால் 5 நாட்கள் நின்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியுமா? அது தான் ஒரு கிரிக்கெட் வீரரின் முன்னால் இருக்கும் சவால்.
எனது பார்வை எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதுதான் இருக்கும். நீங்கள் 20 ஓவர்கள் ஆடுவது எளிது. 50 ஓவர்கள் ஆடுவது எளிது. ஆனால் இதை வைத்து ஒருவரால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி விட முடியும் என நான் கூற மாட்டேன். நீங்கள் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்றால், அதற்கேற்ற உடல் தகுதி வேண்டும்.
தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் வீரர்கள் தடுமாறி வருகிறார்கள். ஏனென்றால், டி20 போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இன்று 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் கூட திணறுகிறார்கள். அந்த இடத்தில் தான் நாம் இருக்கிறோம். அனைத்து பயிற்சியாளர்களும் ஏசி ரூமில் இருந்துக்கொண்டு செயல்படுகிறார்கள். நான் 48 டிகிரி வெயிலில் இருந்து வேலை செய்வேன். யுவராஜ் சிங் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கான ஆர்வம் என்னிடம் உள்ளது என அவர் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ