இந்திய அணி 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது. 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஐபிஎல் போட்டிகளில் இருந்து பல்வேறு திறமையான வீரர்கள் இந்திய அணிக்கு வந்த போதிலும் டி20 உலக கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி தடுமாறியது. இந்நிலையில் ஒரு வழியாக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை வெற்றி பெற்றது, அந்த தொடருடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அதன் பிறகு இந்திய டி20 அணியில் இணைய பல்வேறு இளம் வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 10 வீரர்கள்.. விராட் கோலிக்கு எந்த இடம்?
இந்திய டி20 அணி
இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் டி20 அணியில் யாரை எடுப்பது? யாரை விடுவது? என்பது தான். ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பல அதிரடியான வீரர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ஐபிஎல்லில் கலக்கிய அபிஷேக் சர்மா இந்திய டி20 அணியின் முக்கியமான வீரராக மாறி உள்ளார். அதே போல தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறார். மேலும் இளம் வீரர்களான திலக் வருமா, ரிங்கு சிங் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பிடித்து வருகின்றனர். இவர்களைத் தாண்டி இந்த ஆண்டு பல்வேறு இளம் வீரர்கள் இந்திய அணியில் தங்களது இடங்களை பிடிக்க போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் யாரென்று பார்ப்போம்.

வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2025-ல் ராஜஸ்தான் அணியால் குறைந்த விலையில் வாங்கப்பட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதில் ஐபிஎல்லில் அறிமுகமான அவர் முதல் பந்தில் இருந்து தனது அதிரடியை காட்டி தான் யார் என்பதை நிரூபித்தார். ஐபிஎல்லில் அதிவேக சதம் அடித்து இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தார் வைபவ் சூர்யவன்ஷி. அதனை தொடர்ந்து இந்திய U19 அணியில் இடம் பிடித்தவ வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஸ் மாத்ரேவின் தலைமையில் பல்வேறு சதங்களை அடித்து வருகிறார். இதன் மூலம் இந்திய அணியில் என்னால் விளையாட முடியும் என்பதை தேர்வாளர்களுக்கு சொல்லி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி.

இந்திய அணியில் இடம்பெற முடியுமா?
தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு 14 வயது தான் ஆகிறது. ஐசிசியின் விதிகளின்படி தேசிய அணியில் இடம் பெறுவதற்கு ஒரு வீரருக்கு 15 வயதாக வேண்டும். அதன்படி வைபவ் சூர்யவன்ஷிக்கு வரும் மார்ச் மாதத்துடன் 15 வயதாகும். அதன் பிறகு அவர் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மார்ச் மாதத்திற்குள் டி20 உலக கோப்பை முடிவடையும் நிலையில், அதன் பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கும். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு நடக்கும் தொடர்களில் வைபவ் சூர்யவன்ஷி நிச்சியம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இணைந்து ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், பிரியான்ஷ் ஆர்யா, ஆகிப் நபி, அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம் ஆகியோரும் தங்களது வாய்ப்பிற்காக காத்துக் கொண்டுள்ளனர். இதனால் வரும் காலத்தில் இந்திய டி20 அணையில் நிரந்தர இடம் பிடிப்பது என்பது அசாத்தியமானதாக மாறும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









