இதை செய்தால்தான் அணியில் இடம் கிடைக்கும்.. கம்பீர் கண்டிஷன்! மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!

Gautam Gambhir To Varun Chakaravarthy: பேட்டிங்கிலும் முன்னேறினால் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என்று கெளதம் கம்பீர் கூறியதாக வருண் சக்கரவர்த்தி பகிர்ந்துள்ளார்.  

Written by - R Balaji | Last Updated : Oct 8, 2025, 06:11 PM IST
இதை செய்தால்தான் அணியில் இடம் கிடைக்கும்.. கம்பீர் கண்டிஷன்! மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!

Varun Chakaravarthy: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை அடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் விளையாட இருக்கிறது. இதல் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அக்டோபர் 04ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இதில், ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் நீக்கி, சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தனர். அதேபோல் சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. குறிப்பாக வளர்ந்து வரும் வருண் சக்கரவர்த்தி தேர்வாகாதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Add Zee News as a Preferred Source

வருண் சக்கரவர்த்தி கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஒரு நபராக இருந்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இத்தொடரிலும் அவரது பங்கு அளப்பறியது. இந்த சூழலில், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், பேட்டிங்கிலும் முன்னேறினால் ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கெளதம் கம்பீர் தன்னிடம் கூறியதாக வருண் சர்க்கரவர்த்தி தெரிவித்துள்ளார். 

வருண் சக்கரவர்த்தி

இது தொடர்பாக பேசிய அவர், அடிப்படையில் நீண்ட ஓவர்கள் வீசுவது குறித்து விவாதம் அமைந்தது. டி20 கிரிக்கெட்டில் நீங்கள் தொடர்ச்சியாக 2 ஓவர்கள் வீசுவீர்கள், அதுவே ஒருநாள் போட்டியில் நீங்கள் தொடர்ச்சியாக 5 முதல் 6 ஓவர்களை வீச வேண்டும். அதற்காக நான் வேலை செய்தேன். சம்பியன்ஸ் டிரபியில் வெற்றிகரமாக அதனை என்னாள் செய்ய முடிந்தது. அதேபோல் பேட்டிங்கை முன்னேற்றுவதற்காக உள்ளூரில் நான் கொஞ்சம் மேல் வரிசையில் பேட்டிங் செய்வதை கம்பீர் விரும்புகிறார். 

அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நான் விளையாட விரும்புகிறேன். ஆனால் அனைத்து விடிவ கிரிக்கெட்டிலும் என்னை தேர்வு செய்வது என்பது தேர்வாளர்கள் கையில்தான் உள்ளது. நான் கம்பீருடன் ஐபிஎல்லில் பயணித்துள்ளேன். தற்போது இந்திய அணியிலும் அவரை சுற்றியே இருக்கிறேன். அவர் எப்போதும் சிறப்பான நிலையில் இருப்பதையே விரும்புவார். எனவே அவர் அணியில் இருக்கும்போது நீங்கள் சுமாராக செயல்படுவதற்கு இடமே இல்லை என வருண் சக்கரவர்த்தி கூறினார்.  

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்

இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

மேலும் படிக்க: கம்பீர் பேச்சை கேட்கவில்லை என்றால்.. இதுதான் கதி.. ரோகித் விவகாரத்தில் முன்னாள் வீரர்!

மேலும் படிக்க: ரூ.58 கோடி பேரம்... கம்மின்ஸ், ஹெட்டுக்கு வந்த பெரிய டீலிங் - கேட்டது காவ்யா மாறன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News