IPL 2025 RCB vs GT: ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனின் 14வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
RCB vs GT: ஆர்சிபி - குஜராத் பிளேயிங் லெவன் மாற்றம்
டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணியில் ரபாடா தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் விளையாடவில்லை. 2 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டும் வந்த குஜராத் அணி அர்ஷத் கானுக்கு வாய்ப்பளித்திருந்தது. ஆர்சிபி அணியில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
RCB vs GT: அற்புதமான ஓபனிங் பந்துவீச்சு
ஆர்சிபியில் பில் சால்ட் - விராட் கோலி பேட்டிங்கிலும், குஜராத் அணியில் முகமது சிராஜ் - அர்ஷத் கான் பந்துவீச்சிலும் ஓபனிங்கில் வந்தனர். 2வது ஓவரில் விராட் கோலியின் விக்கெட் அர்ஷத் கானுக்கு கிடைக்க, 3வது ஓவரில் தேவ்தத் படிக்கலின் விக்கெட் சிராஜிற்கு கிடைத்தது. தொடர்ந்து, 5வது ஓவரையும் சிராஜ் வீச அப்போது பில் சால்ட் அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
RCB vs GT: ஜித்தேஷ் - லிவிங்ஸ்டன் ஆறுதல்
ஆர்சிபி இதனால் பவர்பிளேவில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரஜத் பட்டிதார் அணியை சரிவில் இருந்து மீட்பார் என்று எதிர்பார்த்தபோது, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் 7வது ஓவரிலேயே பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜித்தேஷ் - லிவிங்ஸ்டன் இடையே 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. 10வது ஓவருக்கு பின்னரே சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தார்கள்.
RCB vs GT: 170 ரன்களே இலக்கு
நிதானமாக இருந்த ஜோடி, ஆட்டத்திற்குள் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தது கியரை மாற்ற முயற்சித்தார்கள். லிவிங்ஸ்டன் கொடுத்த கேட்சை தவறவிட்ட தெவாட்டியா, அடுத்த சில பந்துகளியே ஜித்தேஷ் கொடுத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார். குர்னால் பாண்டியா சொதப்ப லிவிங்ஸ்டன் - டிம் டேவிட் ஜோடி தான் ஓரளவுக்கு சுமாரான ஸ்கோருக்கு கொண்டு சென்றது.
இந்த ஜோடி 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. லிவிங்ஸ்டன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். டிம் டேவிட் கடைசி கட்டத்தில் சில பவுண்டரிகளை அடித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 169 ரன்களையே எடுத்தது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54, ஜித்தேஷ் 33, டிம் டேவிட் 32 ரன்களை சேர்த்தனர். சிராஜ் 3, சாய் கிஷோர் 2, அர்ஷத் கான், இஷாந்த் சர்மா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
RCB vs GT: சிராஜ் ஆட்ட நாயகன்
170 ரன்கள் என்ற இலக்கை குஜராத் அணி 17.5 ஓவர்களில் அடைந்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 13 பந்துகள் மீதம் இருந்தும் வெற்றியை அடைந்தது. கில் 14, சாய் சுதர்சன் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பட்லர் 39 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 73 ரன்களை எடுத்திருந்தார். கடைசி கட்டத்தில் வந்த ருதர்ஃபோர்ட் 18 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரி உடன் 30 ரன்களை அடித்திருந்தார். ஹேஸ்ல்வுட், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வானார்.
https://t.co/teSEWkWPWL #TATAIPL | #RCBvGT | @gujarat_titans pic.twitter.com/XyHwMy3KVl
— IndianPremierLeague (@IPL) April 2, 2025
RCB vs GT: புள்ளிவிவரம் அப்டேட்
இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி நெட் ரன்ரேட் குறைந்ததால் முதல் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு சரிந்தது. குஜராத் அணி 4வது இடத்தில் நீடிக்கிறது. முதலிரண்டு இடங்களில் முறையே பஞ்சாப், டெல்லி அணிகள் உள்ளன. 5வது, 6வது இடத்தில் முறையே மும்பை மற்றும் லக்னோ அணிகள் உள்ளன. கடைசி 4 இடங்களில் முறையே சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் உள்ளன.
மேலும் படிக்க | சிஎஸ்கேவின் 'மினி ரிஷப் பண்ட்' - இவரை சேர்த்தால் வெற்றிகளை குவிக்கலாம்!
மேலும் படிக்க | வாயை கொடுத்து வாங்கி கட்டிய ரிஷப் பண்ட்.. பஞ்சாப் கொடுத்த பதிலடி.. வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









