’மகா பிரபு இங்கேயும் வந்துடீங்களா’ டிவிட்டரில் விராட் கோலி செய்த சாதனை
கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கும் விராட் கோலி, டிவிட்டரில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, கடந்த சில ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வந்தார். இதனால் அவர் ஃபார்ம் அவுட்டாகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஃபார்முக்கு வந்த விராட் கோலி, ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்து அசத்தினார். மேலும், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தையும் பதிவு செய்தார். அவரின் கம்பேக் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. 20 ஓவர் உலகக்கோப்பை வர இருக்கும் நிலையில், கோலி ஃபார்முக்கு வந்திருப்பது இந்திய அணிக்கும் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை வென்று என்ன யூஸ்? உலக கோப்பைக்கு தகுதி பெறாத இலங்கை!
சதமடித்த பிறகு பேசிய விராட் கோலி, சரியான நேரத்தில் பார்முக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறினார். ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருந்தது. ஆனால் என்னுடைய 50 மற்றும் 60 ரன்களை நல்ல ஸ்கோராக கூட யாரும் பார்க்கவில்லை. மாறாக நான் ஃபார்மில் இல்லை என்றே கூறினர். இப்போது சதமடித்திருக்கிறேன். இதற்காக நான் எடுத்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, அணிக்கும் என்னுடைய பங்களிப்பு தேவையாக இருந்தது. சரியான நேரத்தில் என்னுடைய பேட்டில் இருந்து இப்படி ஒரு ஆட்டம் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை தொடர விரும்புகிறேன் என கூறினார்.
உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் களத்தில் மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் விராட் கோலியின் சதத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக டிவிட்டரில் விராட் கோலிக்கு ஆதரவாக லட்சக்கணக்கான பதிவுகள் போடப்பட்டது. வீடியோ, மீம்ஸ் என அனைத்திலும் விராட் கோலியே இருந்தார். இதனால், அவரின் டிவிட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து 50 மில்லியனைக் கடந்தது. இதன் மூலம் டிவிட்டரில் 50 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்திருக்கும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். இதற்கும் விராட் கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சச்சின் 37 மில்லியன் பேர் டிவிட்டரில் பின் தொடர்கின்றனர்.
மேலும் படிக்க |ரிஷப் பன்ட் முன்னாள் காதலிக்கு ரூட் போட்ட பாகிஸ்தான் இளம் வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ