Virat Kohli Genelia D Souza: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் வளர்ந்த வந்த காலகட்டத்திலேயே பல விளம்பரங்களில் நடித்து வந்தார். அதே சமயம் நடிகை ஜெனிலியாவும் சினிமாவின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார். தமிழ் படமான பாய்ஸ், சச்சின் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் ஜெனிலியா டிசோசா இணைந்து ஃபாஸ்ட்ராக் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தனர்.
அந்த விளம்பரத்தில் விராட் கோலி விமானத்தின் விமானியாகவும், ஜெனிலியா ஏர் ஹோஸ்டஸாகவும் நடித்திருந்தனர். அப்போது, விராட் கோலி விமானத்தை இயக்கி கொண்டிருக்கும்போது, ஏர் ஹோஸ்டஸாக நடித்திருந்த ஜெனிலியா உள்ளே சென்று அவரை ஈர்க்கும் வகையில் நடந்துகொள்வதாகவும், விராட் கோலி விமானத்தை ஆட்டோபைலட் மோடில் போட்டுவிட்டு ஜெனிலியாவுடன் ரோமன்ஸ் செய்வதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தில், எதற்காக இந்த உலகில் ஆட்டோபைலட் என்ற ஒரு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இது அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு விமானி நுற்றுக்கணக்கான பயணிகளின் உயிரை கூட பெரிதாக கருதாமல், விமானி காதல் செய்வது சரியல்ல, என்றும் மற்ற விமானிகளை ஆட்டோபைலட் மோடில் விமானத்தை போட்டுவிட்டு சொந்த வேலையை செய்ய ஊக்கப்படுத்துவது போல இந்த விளம்பரம் உள்ளது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் அகமதாப்பாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து நடைபெற்ற நிலையில், விராட் கோலியின் இந்த பழைய விளம்பரத்தை எடுத்து ரசிகர்கள் விவாதிக்கின்றனர். மேலும், இந்த விளம்பரத்தை சுட்டிக்காட்டி விராட் கோலி அப்போதே பொறுப்பற்று இருந்ததாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிங்க: இங்கிலாந்து அணிக்காக விளையாடப்போகும் 4 இந்திய வீரர்கள்!
மேலும் படிங்க: பும்ராவின் முன்னாள் காதலிகள்... அட 2 பேருமே தமிழ் சினிமா நடிகைகளா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ