மீண்டும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித்! பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், மீண்டும் இந்திய அணியில் எப்போது விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். 

Written by - RK Spark | Last Updated : Jun 16, 2025, 06:13 AM IST
  • டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு.
  • ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட உள்ளனர்.
  • ரோஹித், கோலி மீது அதிக எதிர்பார்ப்பு.
மீண்டும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித்! பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர். இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து இருவரும் ஓய்வை அறிவித்து உள்ளனர். குறிப்பாக விராட் கோலி இன்னும் ஓராண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளதால் இனி ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே இருவரும் விளையாட உள்ளனர். 

மேலும் படிக்க | இனவெறி பிரச்னைகளை முறியடித்து சாம்பியனான South Africa - கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய நாள்!

இந்தியாவின் அடுத்த சில வொயிட் பால் தொடர்கள் 

அடுத்த இரண்டு மாதங்கள் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை இந்திய அணியில் பார்க்க முடியாது. அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது, அதில் ஒரு நாள் தொடரும் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம் பெறுவார்கள். அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் தொடரில் இடம் பெறுவார்கள். அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். ஜனவரி 11, 14 மற்றும் 18 என மூன்று ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளனர்.

மேலும் ஐந்து போட்டியில் கொண்ட டி20 தொடரிலும் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார். அதே சமயம் ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து தொடருக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி இருவரையும் ஐபிஎல் லில் மட்டும் தான் பார்க்க முடியும். அதனை தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பைத் தொடர் நடைபெற உள்ள நிலையில், பிசிசிஐ அதிகமான ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடும் விதத்தில் அட்டவணையை தயார் செய்து வருகிறது.

மேலும் படிக்க | 27 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த டெம்பா பவுமா படை... WTC பட்டத்தை வென்றது தென்னாப்பிரிக்கா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News