Virat Kohli, Rohit Sharma vs Gautam Gambhir: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடிய நிலையில், அத்தொடரில் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை வொயிட்வாஷ் செய்தது. இதையடுத்து ஒருநாள் தொடர் தொடங்கி நேற்று டிசம்பர் 06 முடிவடைந்தது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் சீனியர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவே காரணம். குறிப்பாக விராட் கோலி 3 போட்டிகளில் 2ல் சதம் அடித்து மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அவரே தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
Virat Kohli, Rohit Sharma vs Gautam Gambhir: கம்பீருக்கு இந்திய சீனியர்கள் பதிலடி
இந்த நிலையில், இதன் மூலம் விராட் கோலி, 2025ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ஒருநாள் தொடருக்கு இருந்த எதிர்பார்ப்பை விட விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுவதாலேயே அதிக எதிர்பார்ப்பு இருந்தன. இந்த சூழலில், இருவரும் தங்களது பேட்டால் ரன்களை குவித்தத நிலையில், அவர்களை கொண்டாடி வருகின்றனர்.
Gautam Gambhir, Ajit Agarkar: கம்பீர், அஜித் அகர்கருக்கு சிக்கல்
இந்திய சீனியர்களான இவர்கள் இப்படி சிறப்பாக பேட்டிங் ஆடியது கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின்னர், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் சீனியர்கள் ஒதுக்கப்பட்டனர். இதன் காரணமாக மனக்கசப்புகள் ஏற்பட்டது. அடுத்தடுத்த ஓய்வு அறிவிப்புக்கு வழிவகுத்தது. முதல் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் விலகினார்.
Virat Kohli, Rohit Sharma, Ravichandran Ashwin: அடுத்தடுத்த ஓய்வு முடிவுகள்
பின்னர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர்களை ஓரம்கட்டிவிட்டு 2027 உலகக் கோப்பைக்கு ஒரு புதிய இளம் அணியை உருவாக்கலாம் என்ற எண்ணத்துடன் கம்பீர் இருந்ததாக கூறப்பட்டது.
Most Runs Topper: இந்த ஆண்டின் டாப் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா
ஆனால், அவர் ஓரம்கட்ட நினைத்த இரண்டு இந்திய சீனியர்களுமே தங்களது ஃபார்மை நிருபித்து இருக்கின்றனர்.விராட் கோலி மூன்று போட்டிகளிலும் 302 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 151, ஸ்ட்ரைக் ரேட் 117.05ஆக உள்ளது. மறுபக்கம் ரோகித் சர்மா 3 போட்டிகளில் 147 ரன்களை அடித்திருக்கிறார்.
இந்த ஆண்டின் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் இந்த இரண்டு பேர் தான் இருக்கிறார்கள், விராட் கோலி 13 இன்னிங்ஸ்களில் 651 ரன்களும் இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மா 14 இன்னிங்ஸ்களில் 650 ரன்களை குவித்துள்ளனர். இவர்களுக்கு பின்பே எதிர்காலம் என்று பேசிக்கொண்டிருக்கும் இளம் வீரர்கள் உள்ளனர்.
Team India கோலி, ரோகித் நீக்கம் இந்திய அணிக்கே இழப்பு
கம்பீர் நினைப்பது போல இவர்களை நீக்கினால் இந்திய அணிக்குதான் இழப்பு என்பது தற்போது உறுதியாகிவிட்டது. அதேபோல், 2027 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு இன்னும் இவர்களின் கையில் உள்ளது.
மேலும் படிக்க: தொடரை வென்ற இந்தியா; முடித்துவவைத்த விராட் கோலி - தப்பித்தார் கம்பீர்!
மேலும் படிக்க: IND vs SA T20: இடம் பிடித்தும்.. சுப்மன் கில் விளையாடுவதில் சிக்கல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









