Virat Kohli Test Retirement: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார்.
Virat Kohli Test Retirement: விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பதிவு
இதுகுறித்து விராட் கோலி அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் பேக்கி ப்ளூ தொப்பி அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையை கூற வேண்டுமென்றால், இந்த பார்மட் என்னை இத்தனை தூரத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அது (டெஸ்ட் கிரிக்கெட்) என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, வாழ்க்கை முழுவதும் நான் சுமந்து செல்லக்கூடிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.
வெள்ளை நிற ஆடையில் விளையாடுவதில் ஆழமான தனிப்பட்ட ஒன்று விஷயம் இருக்கிறது. அமைதியான மோதல், அதிக நாட்கள், யாருமே பார்க்காத அந்த சிறிய தருணங்கள்... ஆனால் அவை எப்போதும் உங்களுடனேயே இருக்கும். நான் இந்த பார்மட்டில் இருந்து விலகும் இந்த முடிவு, எளிதானது அல்ல - ஆனால் அது சரியானதாக உணர்கிறேன். நான் அதற்கு (டெஸ்ட் கிரிக்கெட்) என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன், மேலும் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அது எனக்கு திருப்பித் தந்துள்ளது. என்னுடன் விளையாடிய வீரர்கள், வழியில் நான் கடந்து வந்த ஒவ்வொரு நபருக்கும் எனது நன்றியை நிறைந்த இதயத்துடன் கூறுகிறேன். நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் நினைவுக்கூர்வேன்" என பதிவிட்டுள்ளார்.
Virat Kohli Test Retirement: டெஸ்ட் கிரிக்கெட்டும் விராட் கோலியும்...
விராட் கோலி இந்திய அணிக்காக 2011ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமானார். தொடர்ந்து மூன்றே ஆண்டுகளில், அதாவது 2014 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது தோனியிடம் இருந்து விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஸியை பெற்றார். இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் 210 இன்னிங்ஸ்களை விளையாடி 9230 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 46.85 ஆகும். இதில் 30 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 16 ஆயிரத்து 608 பந்துகளை சந்தித்துள்ளார். மேலும் 13 முறை நாட் அவுட்டாகவும் இருந்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை விராட் கோலியின் பேட்டிங்கை விட அவரது கேப்டன்ஸியே பெரியளவுக்கு கவரும்படி இருக்கும். விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதில் 17 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி தோற்றுள்ளது. 40 முறை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது, 11 போட்டிகளில் டிராவாகி உள்ளது. இவர் தலைமையில் இந்திய அணி டெஸ்டில் பல சாதனைகளை புரிந்து பெரிய உயரத்தை அடைந்திருக்கிறது.
இவர் 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் டி20 பார்மட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதன்மூலம், சர்வதேச அளவில் விராட் கோலி இன்னும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனலாம். சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வுபெற்றிருந்தார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வை அறிவித்திருக்கிறார். இருவரும் வரும் 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியில் நீடிப்பார்கள் என கருதப்படுகிறது.
மேலும் படிக்க | ஐபிஎல்க்கு பிறகு ஒட்டுமொத்தமாக மாறும் இந்திய அணி! இவர்களுக்கு வாய்ப்பு இல்லை!
மேலும் படிக்க | விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









