Virat Kohli X Post Viral: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று, கோப்பையை முத்தமிட்டதற்கு பின்னர், சுமார் 7 மாதங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்கள், விராட் கோலியும் ரோஹித் சர்மாவும்...
IND vs AUS: ஆஸ்திரேலியாவில் விராட், ரோஹித்
ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் மூன்று ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இத்தொடரில் விளையாட இருப்பதே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இருப்பினும், இது இவர்கள் இருவருக்கும் கடைசி வெளிநாட்டு தொடராக இருக்குமோ என்ற சந்தேகமும் பலரிடமும் இருக்கிறது.
IND vs AUS: RO-KO உலகக் கோப்பையில் விளையாடுவார்களா?
அடுத்தாண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணி இரண்டு ஓடிஐ தொடர்களை சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது. நவம்பர் - டிசம்பரில் தென்னாப்பிரிக்காவும், ஜனவரியும் நியூசிலாந்து அணியும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்த இரண்டு உள்நாட்டு ஓடிஐ தொடர்களிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா இடம்பெறுவார்கள். அதற்கு பின் அவர்களின் ஃபார்ம்தான் இந்திய அணியில் அவர்களுக்கான இடத்தை உறுதிசெய்யும் எனலாம். இதில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரும் முக்கிய பங்களிக்கும்.
Team India: இந்திய அணியில் ரோஹித்தின் எதிர்காலம்
2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா இல்லையா என்ற கேள்வி அனைவரிடத்திலும் நீடிக்கிறது. ரோஹித் சர்மா உடல் எடையை குறைத்து, பிட்னஸை நிரூபித்துள்ளார். இதன்மூலம் அவர் 2027 உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என எண்ணுகிறார் என்பது உறுதியாகிறது.
Virat Kohli: விராட் கோலி போட்ட X பதிவு
மறுபுறம் விராட் கோலி பிட்னஸை தொடர்ந்து பராமரித்து வருகிறார், ஓடிஐயிலும் நல்ல பார்மில் இருந்திருக்கிறார். ஆனால், அவர் லண்டனுக்கு குடிபெயர்ந்துவிட்ட நிலையில், 2027 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என நினைக்கிறாரா இல்லையா என்பதே பலருக்கும் தெரியாமல் இருந்தது.
The only time you truly fail, is when you decide to give up.
— Virat Kohli (@imVkohli) October 16, 2025
இந்நிலையில், விராட் கோலி அவரது X பதிவில், "நீங்கள் ஒரு விஷயத்தை விட்டுக்கொடுக்க முடிவு செய்யும் போது மட்டுமே, நீங்கள் உண்மையிலேயே தோல்வியடைகிறீர்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை தொடரை விளையாட வேண்டும் என விருப்பத்தில் உள்ளார் என்பது தெரியவருகிறது.
Virat Kohli: தினேஷ் கார்த்திக் சொன்ன ரகசியம்
முன்னதாக, 2027 உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்பதற்காக விராட் கோலி லண்டனில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டதாக தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார். இன்ஸ்டாகிராமில் பேசியபோது தினேஷ் கார்த்திக், "லண்டனில், அவர் தனது வாழ்க்கையில் நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில் தொடர்ச்சியாக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார். மேலும் விராட் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று அமர்வுகள் வரை கிரிக்கெட் விளையாடி எளிதாகப் பயிற்சி செய்தார் என்பதும் எனக்குத் தெரியும்" என்றார்.
மேலும், "இதன்மூலம், அந்த மனிதர் (விராட் கோலி) இந்த உலகக் கோப்பையில் விளையாட விரும்புவதில் தீவிரமாக இருக்கிறார் என்பதை சொல்கிறது" என்றார் தினேஷ் கார்த்திக்.
தொடர்ந்து, "அவர் அணியில் இருந்தால், எந்த பதற்றமும் இருக்காது. ஏனென்றால் அழுத்தத்தின் கீழ் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிவார். அவர் அதை மீண்டும் மீண்டும் பலமுறை செய்துள்ளார். அவர் அதை மீண்டும் செய்வார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றார்.
மேலும் படிக்க | IND vs AUS: ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் ஓய்வை அறிவிக்கும் 4 வீரர்கள்!
மேலும் படிக்க | இனி முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது.. இதுதான் காரணம்!
மேலும் படிக்க | IND vs AUS: இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்... யார் யாருக்கு வாய்ப்பே இல்லை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









