)
India vs South Africa Virat Kohli Upcoming Records: விராட் கோலி கடந்த 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதத்தில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த சூழலில், ஒருநாள் கிரிக்கெட்டில் மற்றும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் 2027 உலகக் கோப்பை வரை தொடர்ந்து இந்திய அணியில் பயணிக்க முடிவும் செய்திருப்பதாக தெரிகிறது.
அதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். ஃபிட்னெஸிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே விராட் கோலி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்தி வரும் நிலையில், 2027 உலகக் கோப்பைக்காக மேலும் ஃபிட் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களை உலகக் கோப்பைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை கழட்டிவிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், நாளை (நவம்பர் 30)தொடங்க இருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாட இருக்கிறார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடரில் பல்வேறு சாதனைகளை விராட் கோலி படைக்க வாய்ப்பு இருக்கிறது. அவை என்னவென்று தற்போது பார்க்கலாம்.
9 சாதனைகள் என்னென்ன?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரேல்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ