India vs New Zealand ODI, Virat Kohli: நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
IND vs NZ ODI: ஓடிஐ தொடரை எங்கு, எப்போது பார்க்கலாம்?
முதல் ஓடிஐ போட்டி நாளை (ஜன. 11) வதோதரா நகரில் நடைபெற இருக்கிறது. 2வது ஓடிஐ போட்டி வரும் ஜன. 14ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெறுகிறது. 3வது ஓடிஐ போட்டி வரும் ஜன. 18ஆம் தேதி இந்தூர் நகரில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல்களிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் போட்டியை நேரலையில் காணலாம்.
IND vs NZ ODI: பழிதீர்க்குமா இந்திய அணி?
நியூசிலாந்து அணி கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மட்டும் விளையாடியது. அத்தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வைட்வாஷ் செய்து இந்திய அணியை படுதோல்வி அடையச் செய்தது. அதுவே விராட் கோலி, ரவிசந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா ஆகியோருக்கு சொந்த மண்ணில் விளையாடிய கடைசி டெஸ்ட் தொடராக அமைந்தது. இந்தச் சூழலில், இந்திய அணி வரும் ஓடிஐ மற்றும் டி20ஐ தொடரை வென்று நியூசிலாந்து அணியை ஓரளவு பழிதீர்க்க முயற்சிக்கும்.
IND vs NZ Virat Kohli: விராட் கோலி படைக்கப்போகும் 3 சாதனைகள்
இது ஒருபுறம் இருக்க, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு 2026ஆம் ஆண்டின் முதல் ஓடிஐ தொடர் இதுவாகும். இதற்கு பின் சுமார் 5 மாதங்கள் சர்வதேச போட்டிகளில் கோலியையும், ரோஹித் சர்மாவையும் ரசிகர்கள் காண முடியாது. எனவே, இத்தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருவரும் உள்ளனர். அந்த வகையில், வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் விராட் கோலி நிச்சயம் இந்த 3 மைல்கற்களை கடந்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.
1. நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓடிஐ ரன்கள்
விராட் கோலி 2008ஆம் ஆண்டில் இருந்து ஓடிஐ போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஓடிஐ அரங்கில் மட்டும் சுமார் 33 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 1,657 ரன்களை சேர்த்துள்ளார். இதன்மூலம், ஓடிஐயில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்களை அடித்த இந்தியர்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 1,750 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில், விராட் கோலி இத்தொடரில் 94 ரன்களை அடித்தால் சச்சின் டெண்டுல்கரை முந்துவார். மேலும், ஓடிஐயில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்தவர் என்ற பெருமையை பெறுவார். சர்வதேச அளவில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஓடிஐயில் அதிக ரன்களை அடித்தவர் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆவார். அவர் 51 போட்டிகளில் 1971 ரன்களை அடித்திருக்கிறார். இத்தொடரில் விராட் கோலி 315 ரன்களை அடித்தால் இதையும் கூட முறியடிக்கலாம்.
2. நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்கள்
விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஓடிஐ அரங்கில் 33 போட்டிகளில் விளையாடி 6 சதங்களை விளாசி உள்ளார். சர்வதேச அளவில் ஓடிஐ போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசியவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், வீரேந்திர சேவாக், விராட் கோலி ஆகியோர் தலா 6 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர். இதில் விராட் கோலி மட்டுமே தற்போது விளையாடி வருகிறார். எனவே, இத்தொடரில் ஒரே ஒரு சதம் அடித்தாலே ஓடிஐ அரங்கில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்தவராக விராட் கோலி உருவெடுப்பார்.
3. சர்வதேச போட்டிகளில் அதிவேக 28 ஆயிரம் ரன்கள்
விராட் கோலி இதுவரை சர்வதேச அளவில் முன்று பார்மட்டையும் சேர்த்து 623 இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ளார். இதில் 27,975 ரன்களை அவர் குவித்தள்ளார். இன்னும் 25 ரன்களை அடித்தால் அதிவேகமாக 28 ஆயிரம் ரன்களை கடந்த பேட்டர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். மேலும், இதுவரை சர்வதேச அளவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் மட்டுமே 28 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்ஸிலும், குமார் சங்கக்காரா 666 இன்னிங்ஸிலும் 28 ஆயிரம் ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IND vs NZ ODI: அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தது யார் யார்? கில்லி யாரு பாருங்க!
மேலும் படிக்க | இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் போட்டி தொடரை நேரலையாக பார்ப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









