விராட் கோலிக்கு இடமில்லை.. ஆல் டைம் ஐபிஎல் 11 அணியை அறிவித்த முன்னாள் வீரர்!

ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வீரர்கள் அடங்கிய ஆல் டைம் 11 அணியை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார். 

Written by - R Balaji | Last Updated : May 17, 2025, 09:31 PM IST
  • ஆடம் கில்கிறிஸ்ட் ஐபிஎல் ஆல் டைம் 11 அணியை வெளியிட்டுள்ளார்
  • அதில் விராட் கோலிக்கு இடம் இல்லை
விராட் கோலிக்கு இடமில்லை.. ஆல் டைம் ஐபிஎல் 11 அணியை அறிவித்த முன்னாள் வீரர்!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இதற்கிடையில் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக கடந்த மே 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதையடுத்து போர் பதற்றம் குறைந்த நிலையில், மீண்டும் இன்று (மே 17) முதல் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட். 

இந்த அணியில் விராட் கோலிக்கு அவர் இடம் அளிக்கவில்லை. நேற்று (மே 16) பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் பாபர் அசாம் தனது உலகின் சிறந்த டி20 அணியை தேர்வு செய்து வெளியிட்டார். அதிலும் விராட் கோலிக்கு இடம் அளிக்கப்படவில்லை. இச்சூழலில் தற்போது ஆடம் கில்கிறிஸ்டும் இடம் அளிக்காதது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்துள்ள அணியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை சேர்ந்த பல வீரர்களுக்கு இடம் அளித்துள்ளார். இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றதால் இந்த அணி வீரர்களுக்கு இடம் அளித்துள்ளார். இந்த அணிக்கு தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். அதேபோல் அணியில் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர். 

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கிரண் பொல்லார்ட், லசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா என 5 வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர். மேலும், சுனில் நரேன், டேவிட் வார்னர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் இடம் அளித்துள்ளார். 

ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் லெவன் 

தோனி (கேப்டன்), ரோகித் சர்மா, டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், கீரான் பொல்லார்ட், சுனில் நரேன், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா, புவனேஷ்வர் குமார். 

மேலும் படிங்க: பெங்களூரில் வெளுக்கும் மழை.. ஆர்சிபி - கேகேஆர் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

மேலும் படிங்க: ஐபிஎல்லில் மிகவும் மந்தமாக விளையாடிய 5 வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News