Asia XI அணியில் இடம்பிடித்த இந்திய வீரர்கள் விவரம் வெளியானது...
ஆசிய லெவன் அணியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விராட் கோலி, ரிஷாப் பன்ட், மொகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஆசிய லெவன் அணியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விராட் கோலி, ரிஷாப் பன்ட், மொகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அடுத்த மாதம் டாக்காவில் நடைபெறும் பங்கபந்து 100 ஆண்டு கொண்டாட்டம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான உலக லெவன் அணியுடன் களத்தில் இறங்கும் ஆசியா லெவன் அணியில் இந்திய கேப்டன் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.
விராட் கோலியின் இருப்பினை பொறுத்து ஒரு போட்டிக்கு கோலியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பெயரிட்டுள்ளது, எனினும் இந்த தகவலை BCCI இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பங்களாதேஷின் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போட்டிகள் மார்ச் 18 முதல் 22 வரை நடைபெற உள்ளன.
ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தும் அணியில் பங்கேற்கும் வீரர்களின் பெயர்களை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் வாசித்ததாக அந்த வலைத்தளம் தெரிவித்துள்ளது.
கோலி அனைத்து டி 20 சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது, ஆனால் இந்திய அணியின் பரபரப்பான கால அட்டவணையை கருத்தில் கொண்டு, விராட் கோலியின் விடுப்பை பொறுத்து விளையாடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் முடிவடைந்து ஒரு வாரம் கழித்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மார்ச் 12-ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இரண்டாவது ஆட்டம் மார்ச் 15-ஆம் தேதி லக்னோவிலும், மூன்றாவது போட்டி மார்ச் 18-ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.
போட்டிகளுக்கு இந்திய வீரர்கள் கிடைப்பது குறித்து கேட்டதற்கு, BCCI தலைவர் சவுரவ் கங்குலி கடந்த வெள்ளிக்கிழமை “நான்கு முதல் ஐந்து வீரர்களை அனுப்ப முடியும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டு பிளெசிஸ் தலைமையிலான உலக லெவன், மூத்த பெரிய ஹிட்டர்களான கிறிஸ் கெய்ல் மற்றும் கீரோன் பொல்லார்ட் ஆகியோரை கொண்டுள்ளது. ஆசியா லெவன் முஸ்தாபிசூர் ரெஹ்மான், தமீம் இக்பால், முஷ்பிகூர் ரஹீம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய நான்கு பங்களாதேஷ் வீரர்களைக் கொண்டுள்ளது. இந்த அணியில் எந்த பாகிஸ்தான் வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இரண்டு அணிகளின் விவரம் பின்வருமாறு:
ஆசியா லெவன் அணி: கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷாப் பந்த், குல்தீப் யாதவ், முகமது ஷமி, திசாரா பெரேரா, லசித் மலிங்கா, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், முஸ்தாபிசுர் ரஹ்மான், தமீம் இக்பால், முஷிஃபிகுர்.
உலக லெவன் அணி: அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் கெய்ல், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், பிரெண்டன் டெய்லர், ஜானி பேர்ஸ்டோ, கீரோன் பொல்லார்ட், அடில் ரஷீத், ஷெல்டன் கோட்ரெல், லுங்கி நெகிடி, ஆண்ட்ரூ டை, மிட்செல் மெக்லெனகன்.