)
ஆசிய கோப்பை கடைசியாக 2023ஆம் ஆண்டு ஓடிஐ தொடராக நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், இனி இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாது என பரவலாக பேசப்பட்டு வந்தது.
தற்போது பதற்றம் தணிந்த நிலையில், நடக்க இருக்கும் ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆசிய கோப்பைக்கான அட்டவணை இதுவரை அதிகாரப்பூரவமாக வெளியிடப்படாத நிலையில், வரும் ஜூலை மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித், கோலி இல்லை
இந்த ஆசிய கோப்பை தொடர் நடைபெறுமா என்பது விரைவில் உறுதியாகிவிடும். அதேசமயம் தொடரை ஒருநாள் தொடராக இல்லாமல் டி20 தொடராக நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரோகித் சர்மா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம் பெற வாய்ப்பில்லை. நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். எனவே இனி இந்திய டி20 அணியில் இவர்கள் இடம் பெற மாட்டார்கள்.
ஐசிசியின் விதிப்படி, ஆசிய கோப்பைக்கு நடத்தப்படும் ஆண்டுக்கு பிறகு முக்கிய ஐசிசி தொடர் எந்த வடிவில் நடக்கிறதோ அந்த வடிவில்தான் ஆசிய கோப்பையை நடத்த வேண்டும். அப்படி தான் கடந்த 2023 ஆசிய கோப்பையும் நடைபெற்றது. 2023ல் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற்றது. அதற்கு முன்பாக நடந்த ஆசிய கோப்பை ஒருநாள் தொடராக நடந்தது. அதன்படி, 2026ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பை நடைபெற இருப்பதால், வரும் ஆசிய கோப்பை டி20 வடிவில் நடைபெற உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ