விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியில் செய்யப்போகும் மிகப்பெரிய சாதனை! இதுவரை யாரும் செய்யவில்லை

Virat Kohli : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் சாதனையை படைக்கப்போகிறார். அந்த சாதனை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Feb 28, 2025, 05:04 PM IST
  • விராட் கோலி படைக்கப்போகும் சாதனை
  • இதுவரை எந்த பிளேயரும் செய்யவில்லை
  • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்வாரா?
விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியில் செய்யப்போகும் மிகப்பெரிய சாதனை! இதுவரை யாரும் செய்யவில்லை

Virat Kohli records | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார். பல புதிய மைல்கல்களை எட்டியிருக்கும் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இன்னொரு மகத்தான சாதனை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சாதனையை அவர் செய்தால் உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் விராட் கோலி வசம் வரும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மார்ச் 2ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த சாதனையை விராட் கோலி அந்த போட்டியில் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Add Zee News as a Preferred Source

சாம்பியன்ஸ் டிராபி போட்டி 

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 2 ஆம் தேதி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

விராட்கோலி சதம் 

விராட் கோலியை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். சாம்பியன்ஸ் டிராபியில் இது அவரது முதல் சதம். மார்ச் 2 ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக நடக்கும் போட்டியிலும் அதே ஃபார்மில் விராட்கோலி விளையாடுவார். அப்படியொரு இன்னொரு நல்ல இன்னிங்ஸை விளையாடினால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் சில சாதனைகளை விராட் கோலி முறியடிக்க முடியும்.

முதல் பேட்ஸ்மேன் விராட் 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் கோலி இதுவரை 6 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக அவர் அரைசதம் அடிக்க முடிந்தால், சாம்பியன்ஸ் டிராபியில் 7 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை சாம்பியன்ஸ் டிராபியில் யாரும் 6 முறைக்கு மேல் 50+ ரன்கள் யாரும் எடுத்ததில்லை. இதுவரை நடந்த ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் டிராபியில் மட்டும் விராட் கோலி இதுவரை 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம், சாம்பியன்ஸ் டிராபியில் அதிக முறை 50+ ஸ்கோர்கள் அடித்த ஷிகர் தவான், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்தார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த வீரர்கள்

ஷிகர் தவான் - 6 (3 சதங்கள், 3 அரை சதங்கள்)

சவுரவ் கங்குலி - 6 (3 சதங்கள், 3 அரை சதங்கள்)

ராகுல் டிராவிட் - 6 (0 சதங்கள், 3 அரை சதங்கள்)

விராட் கோலி - 6 6 (1 சதம், 5 அரை சதங்கள்)

ஜோ ரூட் - 5 (2 சதங்கள், 3 அரை சதங்கள்)

மேலும் படிங்க: IPL 2025: இந்த ஆண்டு சேப்பாக்கம் இல்லை! மைதானத்தை மாற்றிய சிஎஸ்கே!

மேலும் படிங்க: IND vs NZ: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியை இல்லாவிட்டால் பெரிய பிரச்னை - என்ன காரணம்?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News