வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்கிறாரா இல்லையா? உண்மையை விளக்கும் முன்னாள் வீரர்!

Aakash Chopra Reveals If Washington Sundar Join Csk: ரவிச்சந்திரன் ஆஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் செய்ய இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.  

Written by - R Balaji | Last Updated : Nov 4, 2025, 05:09 PM IST
  • வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணி செல்கிறாரா?
  • உண்மை இதுதான்
  • ஆகாஷ் சோப்ரா விளக்கம்
வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்கிறாரா இல்லையா? உண்மையை விளக்கும் முன்னாள் வீரர்!

Washington Sundar Csk Trade: 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 10 ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் இருந்து தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், வீரர்கள் டிரேடிங் (அணிமாற்ற) முறையிலும் அணியிலிருந்து அணி மாறும் செயல்பாடுகளும் நடந்து வருகின்றன.  

Add Zee News as a Preferred Source

சிஎஸ்கே செல்கிறாரா வாஷிங்டன் சுந்தர்

அந்த வகையில் அதிகமாக பேசப்பட்ட டிரேடிங் செய்தியாக, குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடும் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்படுவார் என்ற வதந்தி பரவி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் மட்டுமில்லை, முன்னாள் வீரர்களிடையிலும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. அஸ்வின் ஓய்வை அறிவித்ததை அடுத்து, அவருக்கு பதிலாக சிஎஸ்கே வாஷிங்டன் சுந்தரை தங்களது அணியில் சேர்த்துக் கொள்வார்கள் என்ற செய்திகள் இணையத்தில் வைரலாகியிருந்தன. ஆனால் இதுவரை குஜராத் டைட்டன்ஸோ, சென்னை சூப்பர் கிங்ஸோ இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வழங்கவில்லை.  

ஆகாஷ் சோப்ரா விளக்க்ம் 

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனல் வழியாக, "வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்ல மாட்டார் என எனக்கு தோன்றுகிறது" என கருத்து தெரிவித்துள்ளார். "சுந்தர் சில போட்டிகளில் வாய்ப்பு இல்லாததைப் பற்றி கூறியிருந்தாலும், குஜராத் அணியின் சூழலும் செட்டப்பும் அவருக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்தால், அவர் தற்போதைக்கு வேறொரு அணிக்குச் செல்ல விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் குஜராத் அணி அவரை முழுநேர பந்துவீச்சாளராக மட்டுமல்ல, திறமையான பேட்ஸ்மேனாகவும் நம்பிக்கை வைத்துள்ளது. இத்தகைய நிலையில் அந்த அணி அவரை வெளியேற்றாது என்பதில் எனக்கு உறுதி உள்ளது" எனச் ஆகாஷ் சோப்ரா கூறினார்.  

தற்போது டிரேடிங் காலம் நெருங்கியுள்ள நிலையில், வாஷிங்டன் சுந்தர் உண்மையில் சிஎஸ்கே அணியில் இணைவாரா, அல்லது குஜராத் டைட்டன்ஸில் தொடர்வாரா என்பது ரசிகர்களிடையே ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: நீதா அம்பானி அருகே அமர்ந்து ரோகித் சர்மா செய்த வேலை.. வைரலாகும் வீடியோ!

மேலும் படிக்க: உலகக் கோப்பை வென்றவுடன் அதிரடி முடிவு.. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவியிலிருந்து விலகல்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News