ஐபிஎல்: விராட் கோலி செய்யப்போகும் மகத்தான சாதனை - இனி யாருமே செய்ய முடியாது

S.Karthikeyan
Nov 09,2024
';


ஐபிஎல் 2025 தொடரில் விராட் கோலி மகத்தான ஒரு உலக சாதனையை செய்யப்போகிறார். இந்த சாதனையை இனி வரும் ஆண்டுகளில் எந்தவொரு கிரிக்கெட் பிளேயருமே செய்ய முடியாது.

';


ஆம், விராட் கோலி ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் தொடங்கியது முதல் அந்த அணிக்காக விளையாடுகிறார்.

';


ஐபிஎல் 2025 தொடரிலும் ஆர்பிசி அணிக்காகவே விராட் கோலி விளையாட இருக்கிறார். இதன் மூலம் அந்த அணிக்காக 18வது ஆண்டாக ஐபிஎல் தொடரில் விளையாடப்போகும் ஒரே ஒரு பிளேயராக மாறப்போகிறார் விராட் கோலி.

';


ஆர்சிபி அணிக்காக அதிக ஆண்டுகள் விளையாடிய பிளேயர் என்ற சாதனை அவர் வசம் இருந்தாலும் ஒரே ஒரு ஐபிஎல் அணிக்காக அதிக ஆண்டுகள் விளையாடிய பிளேயர் என்ற சாதனையும் அவர் படைக்க இருக்கிறார்.

';


இதன் மூலம் கிரிக்கெட் டி20 லீக் போட்டிகள் வரலாற்றில் எந்தவொரு பிளேயரும் செய்யவே முடியாத சாதனையை விராட் கோலி நிகழ்த்தப்போகிறார். இனி வரும் காலங்களில் எந்தவொரு பிளேயரும் 18 ஆண்டுகள் விளையாடுவார்களா? என்பது சந்தேகமே.

';


அதேநேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஆர்சிபி அணி இதுவரை ஒரு சாம்பியன் பட்டம் கூட வெல்லவில்லை. இம்முறையாவது மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.

';


அதனால் மீண்டும் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை இந்த ஆண்டு ஏற்க இருக்கிறார். ஒரே ஐபிஎல் அணிக்கு இரண்டாவது முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்கும் இரண்டாவது பிளேயர் இவர் தான்.

';


இதற்கு முன்னர் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்டு மீண்டும் அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இப்போது தோனி வரிசையில் விராட் கோலியும் இடம்பெற இருக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story