பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் வார்னர்
பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் அவர் 124 பந்துகளில் 163 ரன்கள் விளாசினார்.
இதில் 9 சிக்சர்களும், 14 பவுண்டரிகளும் விளாசினார். ஹரீஸ் ராவுப் பந்துகளை பறக்க விட்டார்
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய வார்னர் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பின்னர் 85 பந்துகளில் சதம் விளாசினார் வார்னர். ஒரு நாள் போட்டியில் 21வது சதம், உலக கோப்பையில் 5வது சதம்.
சதமடித்த பிறகு அல்லு அர்ஜூனின் புஷ்பா ஸ்டைலில் சதத்தை கொண்டாடினார் வார்னர்
கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வார்னர் சதம் விளாசினார்.
130(119), 179(128), 107(111), 163(124) இதுதான் வார்னரின் கடைசி 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எடுத்த ரன்கள்
இந்த சதம் சர்வதேச கிரிக்கெட்டில் 47வது சதமாகவும் வார்னருக்கு அமைந்தது
நடப்பு உலக கோப்பையில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் சாதனை இப்போது டேவிட் வார்னரிடம் வந்துள்ளது.
ஒருநாள் போட்டியில் அதிகமுறை 150 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார் வார்னர்
7 முறை வார்னர் 150 ரன்களுக்கு மேல் ஒருநாள் போட்டியில் அடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8 முறை அடித்து முதல் இடத்தில் உள்ளார்.