சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் (234) என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் (615) அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ரோஹித்.
அடுத்தபடியாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் 233 சிக்சர்களை விளாசி உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ள தோனி 211 சிக்சர்களை விளாசி உள்ளார்.
மேலும் ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் பெருமையையும் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 171 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் இதுவரை எல்லா காலத்திலும் மிக வெற்றிகரமான கேப்டனாக இருந்து வருகிறார்.
நியூசிலாந்தின் தொடக்க வீரரும், கேப்டனுமான பிரெண்டன் மெக்கல்லம் 170 சிக்சர்களை அடித்துள்ளார்.
அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கல்லம் வெறும் 140 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.