சூர்யகுமார் யாதவ் 2012 சீசனுக்கான ஐபிஎல் ஒப்பந்தத்தை மும்பை இந்தியன்ஸிடம் (எம்ஐ) பெற்றார்.
இருப்பினும், அவர் அந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடைய திறமையை அவரால் நிரூபிக்க முடியவில்லை
2014 ஐபிஎல் ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
அவர் ஐபிஎல் 2015-ல் ஈடன் கார்டனில் எம்ஐக்கு எதிராக 20 பந்துகளில் ஐந்து சிக்ஸர்களுடன் 46 ரன்கள் எடுத்தபோது அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
அணியின் துணை கேப்டனாக இருந்து தொடர்ந்து விளையாடினார். 2018 ஐபிஎல் ஏலத்தில், மும்பை இந்தியன்ஸால் ₹3.2 கோடிக்கு வாங்கப்பட்டார்
மும்பை இந்தியன்ஸுடன் வெற்றிகரமான பங்களிப்பிற்குப் பிறகு, 2022 சீசன் மெகா ஏலத்தில் INR 8 கோடிக்கு அவர் தக்கவைக்கப்பட்டார்.
இருப்பினும், அவரது இடது முன்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் 2022-ல் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023-ல் யாதவை INR 8 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது. ICC நம்பர்.1 T20 பேட்ஸ்மேனாகவும் உயர்ந்தார்.
2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
பொல்லார்டு ஓய்வுக்குப் பிறகு அவர் ஐபிஎல் 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மே 12, 2023 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார்.