லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் ரேஸில் தற்போது இல்லை.
ஆர்சிபி அணி முதல் அணியாக, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
10 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு 2 போட்டிகளே உள்ளன. எனவே பிளே ஆப் போக 5 % வாய்ப்பே உள்ளது.
11 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கும் கேகேஆர் அணிக்கு 2 போட்டிகளே உள்ள நிலையில், 10% வாய்ப்பு உள்ளது.
12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணிக்கு 2 போட்டிகள் உள்ளன. பிளே ஆப் போக 33% வாய்ப்புள்ளது.
12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் ஆர்ஆர் அணிக்கு 3 போட்டிகள் உள்ளன. பிளே ஆப் போக 58% வாயப்புள்ளது.
13 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கு இன்னும் ஒரு போட்டியே உள்ளது. பிளே ஆப் போக 23% மட்டுமே வாய்ப்புள்ளது. சிஎஸ்கேவை விட மிக கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது.
14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் எஸ்ஆர்ஹெச் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு போக 74% வாய்ப்புள்ளது.
16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. பிளே ஆப் போக 98% வாய்ப்புள்ளது.