ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
35 வயதாகும் ஸ்டார்க்கின் இந்த திடீர் அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026ல் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஸ்டார்க் ஓய்வு முடிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வு குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க், "டெஸ்ட் கிரிக்கெட்தான் எப்போதுமே எனக்கு முதன்மையானது" என்று தெரிவித்துள்ளார்.
"2027 இந்தியாவில் டெஸ்ட் தொடர், ஆஷஸ் மற்றும் ஒருநாள் உலக கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" - ஸ்டார்க்
"எனது இந்த முடிவு, அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்" - ஸ்டார்க்