CSK அணிக்காக அதிக சிக்ஸர்களை அடித்த டாப் 7 வீரர்கள்

Sudharsan G
Apr 04,2026
';

7. ஷேன் வாட்சன்

2018, 2019, 2020 ஆகிய மூன்று ஆண்டுகள் மட்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி, 68 சிக்ஸர்களை அடித்துள்ளார். அத்துடன் அவர் ஐபிஎல் தொடரில் ஓய்வுபெற்றார்.

';

6. ரவிந்திர ஜடேஜா

இவர் 2012 - 2025 வரை 78+ சிக்ஸர்களை சிஎஸ்கே அணிக்காக அடித்துள்ளார். இவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடுகிறார்.

';

5. ருதுராஜ் கெய்க்வாட்

2020ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடும் இவர் 91+ சிக்ஸர்களை அடித்துள்ளார். தற்போதைய கேப்டன் ஆவார்.

';

4. பாப் டூ பிளெசிஸ்

2014, 2015 மற்றும் 2018 - 2021 சீசன் வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி 93 சிக்ஸர்களை அடித்தார். 2022இல் அவர் ஆர்சிபிக்கு சென்றுவிட்டார். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

';

3. அம்பதி ராயுடு

2018 - 2023 சீசன் வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி இவர் 94 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

';

2. சுரேஷ் ரெய்னா

2008 - 2015 மற்றும் 2018 - 2021 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இவர் 219 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

';

1. எம்எஸ் தோனி

2008 - 2015 மற்றும் 2018 முதல் 2025 வரை மட்டும் தோனி சிஎஸ்கே அணிக்காக 248+ சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இந்த சீசன் அவருக்கு கடைசி சீசன் என கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story