கேமராக்களின் ஃபேவரைட் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

';

காவ்யா மாறன்

ஐபிஎல் 2024 இன் இறுதிப் போட்டியில் KKR அணியிடம் SRH அணி தோல்வியடைந்தது. ஆனால், தோல்வியிலும் வெற்றியை ருசி பார்த்துள்ளார் SRH அணியின் உரிமையாளர் காவ்யா மாறன்.

';

ஐபிஎல் 2024

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் யாரும் எதிர்பாராத வண்ணம் SRH அணி அதிரடியாக ஆடியது. அணியின் ஒவ்வொரு அடியிலும் அதன் உரிமையாளர் காவ்யா மாறன் உடனிருந்தார். டிரஸ்ஸிங் ரூம் மற்றும் ஸ்டேடியத்தில் அவர் அடிக்கடி வீரர்களை உற்சாகப்படுத்துவதைக் காண முடிந்தது.

';

ரியாக்ஷன்கள்

தோல்விக்கும் வெற்றிக்கும் அவர் காட்டிய ரியாக்ஷன்கள் இணையத்தில் தீயாய் பரவின. வீரர்களுக்கு இணையாக அவரும் பிரபலமானார். அவரை பற்றி அதிகம் பேசப்பட்டது.

';

கலாநிதி மாறன்

காவ்யா மாறனைப் பற்றி இப்போது அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இவர் தமிழ்நாட்டின் ஒரு பெரிய வணிகக் குடும்பத்தின் பெண் வாரிசு. இவரது தந்தை கலாநிதி மாறன் பெரிய ஊடக நிறுவனமான சன் குழுமத்தின் உரிமையாளர்.

';

ஸ்டெல்லா மேரீஸ்

காவ்யா, சென்னையிலுள்ள புகழ்பெற்ற ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் எம்பிஏ படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு வார்விக் பிசினஸ் ஸ்கூலில் MBD பட்டம் பெற்றார். பின்னர் அவர் தந்தையின் வணிகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

';

ஐபிஎல் அணி

லண்டனில் இருந்து திரும்பிய பிறகு, 2018 இல், கலாநிதி மாறன் தனது மகளை ஐபிஎல் அணியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) தலைமை நிர்வாக அதிகாரியாக்கினார். SRH உடன், காவ்யா குழுமத்தின் மற்ற நிறுவனங்களையும் கையாளுகிறார்.

';

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்

சன் ரைசர்ஸ் தவிர தென் ஆப்பிரிக்காவின் SA20 -யின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் கிரிக்கெட் அணிக்கும் அவர் சொந்தக்காரர். SA20 2022 இல் தொடங்கியது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அதில் இரண்டு முறை சாம்பியன் ஆனது.

';

நிகர மதிப்பு

காய்வா மாறனின் சொத்து மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story