மும்பை செய்த தவறு! மழை வந்தால் பஞ்சாப் தான் பைனல்! ஏன் தெரியுமா?

இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. அகமதாபாத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. 

Written by - RK Spark | Last Updated : Jun 1, 2025, 09:41 AM IST
  • இன்று நடைபெறும் குவாலிபயர் 2.
  • பஞ்சாப் - மும்பை அணிகள் மோதல்.
  • பைனலில் ஆர்சிபி அணி.
மும்பை செய்த தவறு! மழை வந்தால் பஞ்சாப் தான் பைனல்! ஏன் தெரியுமா?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் பைனல் போட்டி வரும் ஜூன் மூன்றாம் தேதி நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பைனலுக்கு ஏற்கனவே சென்றுள்ளது. இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியுடன் பைனலில் மோத போவது யார் என்று தெரிந்துவிடும். இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டு பைனலுக்கு சென்று இருந்தது. அதன் பிறகு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பைனலுக்கு செல்லலாம். இருப்பினும் தற்போது வரை ஒரு கோப்பையை கூட பஞ்சாப் வென்றதில்லை. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | குஜராத் பிளேயர் குசல் மென்டிஸ் மீது ரசிகர்கள் வைத்த மேட்ச் பிக்சிங் புகார் - உண்மை என்ன?

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது ஆறாவது கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது. எழுமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தற்போது குவாலிபர் 2-ல் விளையாட உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் பைனலில் ஆர்சிபி அணியுடன் மும்பை இந்தியன்ஸ் மோதும். முன்னதாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த பைனல் போட்டி நடைபெற இருந்தது.  இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பிரச்சினைகள் காரணமாக சிறிது நாட்கள் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தாவில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பது என்பதற்காக அகமதாபாத்தில் போட்டிகள் மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்றைய போட்டியில் மழை பெய்து ஆட்டம் நடைபெறாமல் போனால் யார் வெற்றியாளர்கள் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. ஒரு வேலை போட்டி நடைபெறாமல் போனால் புள்ளி பட்டியலில் டாப் இடத்தில் இருக்கும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அப்படி பார்த்தால் ஸ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் அணி தான் ஃபைனல் போட்டிக்கு தகுதி பெறும். ஏனெனில் அவர்கள் புள்ளி பட்டியலில் 19 புள்ளிகள் உடன் நல்ல ரன் ரேட்டில் மும்பையை ஒப்பிடும் போது முன்னணியில் உள்ளனர். 

போட்டியை முடிந்தவரை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிடும். இதற்காக கூடுதல் நேரங்களும் ஒதுக்கப்படும். இருப்பினும் போட்டியை நடத்த முடியவில்லை என்றால் புள்ளி பட்டியலில் முதலில் இருக்கும் அணி தகுதி பெறும். தற்போது வரை குவாலிபயர் 2 போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்கள் அறிவிக்கப்படவில்லை. பைனல் போட்டிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் பைனல் போட்டி மழையின் காரணமாக ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | குஜராத் அணிக்கு CSK பரவாயில்லை; GT-க்கு கிடைத்த 'இந்த' பெரிய கெட்ட பெயர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News