)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். இனி அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட இருக்கின்றனர். அவர்கள் இருவருமே வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட இருப்பதாக விரும்பம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதன் பின் இருவருமே ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது இந்திய அணிக்கு திரும்புகிறார்கள்?
தற்போது இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பி உள்ளது. இதையடுத்து ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது. இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வ்ரை நடைபெற இருக்கிறது. ஆனால், இம்முறை ஆசிய கோப்பை தொடர் டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. இதனால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இத்தொடரில் பங்கேற்க மாட்டார். இச்சூழலில்தான், அவர்கள் எப்போது இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது,
அக்டோபரில் ஆஸ்திரேலியா தொடர்
இந்த நிலையில், இருவரும் எப்போது இந்திய அணிக்கு திரும்பி விளையாடுவார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் விளையாட உள்ள தேதிகளும் வெளியாகி உள்ளது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளனர். அதாவது ஆசிய கோப்பை முடிந்த பின்னர், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
இதில் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட இருக்கின்றனர். இத்தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் அக்டோபர் 19ஆம் தேதியும் இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் 23ஆம் தேதியும் மூன்றாவது போட்டி சிட்னி நகரில் 25ஆம் தேதியும் நடைபெற உள்ளது. கடைசியாக சாம்பியன் டிராபி தொடரில் தான் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ