ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த டி20 உலகக் கோப்பையை வென்றவுடன் டி20ல் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த ஆண்டு மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றனர். இதனால் தற்போது ஒருநாள் (ODI) கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகின்றனர். 2027 உலகக் கோப்பை வரை இவர்கள் இந்திய ஒருநாள் அணியில் தொடர திட்டம் வைத்துள்ளனர்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா
டெஸ்ட் ஓய்வுக்கு பின்னர் இருவரும் அக்டோபரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் விலையாடினர். அத்தொடரில் கோலி,ரோகித் இருவருமே சிறப்பாக விளையாடினர். இதையடுத்து நவம்பர் 30ஆம் தேதி தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடினர். இத்தொடரில் தாங்கள் யார் என்று இருவரும் நிருபித்து இருக்கின்றனர். குறிப்பாக விராட் கோலி எப்போதும் தான் கிங் என்பதை உலகிற்கு காட்டி இருக்கிறார். அவர் இத்தொடரில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார். இதற்க்காவே ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை அடுத்ததாக எப்போது ஃப்ளூ ஜெர்சியில் பார்க்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
மீண்டும் இந்திய ஜெர்சியில் பார்ப்பது எப்போது?
இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பயணம் இந்த ஆண்டில் தென்னாப்பிரிக்கா தொடருடன் நிறைவடைந்தது. இவர்களை மீண்டும் இந்திய ஜெர்சியில் பார்க்க இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. ஜனவரிக்கு பின் 5 மாதங்கள் கழித்துதான் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி 18 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த 18 போட்டிகளிலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட அதிக வாய்ப்பிருக்கிறது.
India ODIs Matches Full Schedule: 2026ல் இந்திய அணி விளையாட இருக்கும் ஒருநாள் போட்டிகள்
ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதையடுத்து ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களும் இந்தியாவில் நடைபெறுகிறது.
2026 ஜூலை-யில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.
2026 செப்டம்ப மற்றும் அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விலையாட இருக்கிறது. இத்தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
2026 அக்டோபர் மற்றும் நவம்பரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடை இருக்கிறது. இந்த தொடர் நியூசிலாந்தில் நடைபெறுகிறது.
இறுதியாக 2026 டிசம்பரில் இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இத்தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
மேலும் படிக்க: IND vs SA T20: இடம் பிடித்தும்.. சுப்மன் கில் விளையாடுவதில் சிக்கல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









