7 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்திய அணியின் வீரர்கள் தங்களது அன்பையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா அணி இழந்த ஒரு நாளுக்குப் பிறகு, விராட் கோலி சனிக்கிழமையன்று இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை சமூக ஊடகம் மூலம் அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Virat Kohli ராஜினாமா: டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி


கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனை அபாரமானது. 2014ல் அவர் பொறுப்பேற்ற போது, ​​ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் 7வது இடத்தில் இருந்த இந்திய அணி, கடந்த நான்கு ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக உள்ளது.  கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தினார், அதில் 40 போட்டிகளில் வெற்றி பெற்றும், 17 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.



விராட்டின் இந்த முடிவு குறித்து பிசிசிஐ உயரதிகாரிகள் கூறுகையில், பதவி விலகுவது விராட்டின் தனிப்பட்ட முடிவு, வாரியத்தில் இருந்து யாரும் அவரை அவ்வாறு செய்ய வற்புறுத்தவில்லை என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி வீரர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.  ரோஹித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அதிர்ச்சியடைந்தேன்!! ஆனால், இந்திய கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டதற்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.  ஆல்ரவுண்டர் அஸ்வின், "கிரிக்கெட் கேப்டன்கள் எப்போதும் அவர்களின் சாதனைகள் மற்றும் அவர்கள் நிர்வகித்த வெற்றிகளைப் பற்றி பேசப்படுவார்கள், ஆனால் ஒரு கேப்டனாக உங்கள் பாரம்பரியம், நீங்கள் அமைத்துள்ள அளவுகோல்களுக்கு நிற்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கையில் வெற்றிகளைப் பற்றி பேசுபவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.  வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, " கேப்டனாக அணிக்கு உங்கள் பங்களிப்பு விலைமதிப்பற்றது, நீங்கள் இந்திய அணிக்கு ஒரு சிறந்த தலைவராக இருந்தீர்கள். உங்கள் கீழ் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.



இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது இன்னும் 15 நாட்களில் முடிவு செய்யப்பட உள்ளன.  கடைசி டெஸ்டுக்குப் பிறகு கேப்டவுனில் தனது சக வீரர்களிடம் விராட் கோலி, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அடுத்த நாளே விலகப் போவதாகத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கேப்டன் குறித்து பிசிசிஐ ஏற்கனவே தேசிய தேர்வுக் குழு மற்றும் அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நீண்ட காலமாக இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களாக இருப்பதால் அடுத்த கேப்டன் பொறுப்பில் முன்னணியில் உள்ளனர்.  ரோஹித்தின் உடற்தகுதி பிசிசிஐக்கு பெரும் கவலையாக இருந்து வருகிறது.  இருப்பினும், அவர் இலங்கை தொடரில் இருந்து டெஸ்ட் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


ALSO READ | அம்பயர்களால் இந்திய அணிக்கு கிடைத்துள்ள பரிசு..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR