உலக கிரிக்கெட்டை வியப்பில் ஆழ்த்திய தமிழக வேகப்பந்து வீச்சாளர்.. மணிக்கு 147.3 கிமீ வேகம்

TN Bowler Pranav Raghavendra: ஏவுகணை போல பந்தை வீசுகிறார். யார் இந்த பிரணவ் ராகவேந்திரா? 17 வயது இளம் ஆபத்தான தமிழக வேகப்பந்து வீச்சாளர் மணிக்கு 147.3 கிமீ வேகத்தில் பந்து வீசினார். விரைவில் ஷோயப் அக்தரின் உலக சாதனையை முறியடிப்பார் என ஆவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 13, 2025, 05:05 PM IST
உலக கிரிக்கெட்டை வியப்பில் ஆழ்த்திய தமிழக வேகப்பந்து வீச்சாளர்.. மணிக்கு 147.3 கிமீ வேகம்

Cricket News In Tamil: தற்போது உலக கிரிக்கெட்டில் அத்தகைய ஒரு பந்து வீச்சாளர் வந்துள்ளார், அனைவரின் கவனமும் அவர் மீது தான் இருக்கிறது. உலகில் வேகமாக பந்து வீசக்கூடியவர் என்ற சாதனை படைக்க முடியும். தற்போது, ​​உலகின் அதிவேகத்தில் பந்து வீசியவர் என்ற சாதனை முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரின் பெயரில் உள்ளது. 2003 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், உலக கிரிக்கெட் வரலாற்றில் வேகமான பந்தை ஷோயப் அக்தர் வீசினார். ஷோயப் அக்தர் வீசிய பந்தின் வேகம் மணிக்கு 161.3 கிமீ ஆகும். இன்றுவரை எந்த பந்து வீச்சாளரும் ஷோயப் அக்தரின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. இது அவரின் சாதனையின் மகத்துவத்தை காட்டுகிறது. அதேநேரம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தனது கிரிக்கெட் பயணத்தில் பல முறை 150 கிமீ வேகத்தில் பந்து வீசி உள்ளார். இது மிகவும் கடினம் என்று கூறப்பட்டது.

யார் இந்த ஆர்.டி. பிரணவ் ராகவேந்திரா?

உலகில் எந்த பந்து வீச்சாளரும் ஷோயப் அக்தரின் உலக சாதனையை முறியடிக்க முடியவில்லை. ஆனால் இதைச் செய்யக்கூடிய ஒரு பந்து வீச்சாளர் இருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்த வேலூரில் பிறந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆர்.டி. பிரணவ் ராகவேந்திரா தான். தனது பந்துவீச்சு வேகத்தால் தமிழகத்திலும், அதற்கு அப்பாலும் வெக்க அலைகளை உருவாக்கி வருகிறார். 

மணிக்கு 147.3 கிமீ வேகத்தில் பந்து வீச்சு

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஒரு அறிக்கையின்படி, வலது கை வேகப்பந்து வீச்சாளர் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு மையத்தில் மணிக்கு 147.3 கிமீ வேகத்தில் பந்து வீசி உள்ளார். இது 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக வேகமாக வீசப்பட்ட பந்து வீச்சு ஆகும். 

ஷோயப் அக்தரின் உலக சாதனையை முறியடிப்பாரா?

ஆர்.டி. பிரணவ் ராகவேந்திரா 17 வயதில் மணிக்கு 147.3 கிமீ வேகத்தில் பந்து வீசும்போது, ​​24 வயதிற்குள் அவர் ஷோயப் அக்தரின் உலக சாதனையை முறியடிக்க முடியும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

கிரிக்கெட் பக்கம் பிரணவ் ராகவேந்திரா வரக் காரணம் என்ன?

பிரணவ் ராகவேந்திரா ஒரு ஓட்டப்பந்தய வீரராகத் தனது பயணத்தை தொடங்கினார். அவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிறந்த வீரராக இருந்தார். அதன் பின்னர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். தனது சகோதரர் பிறந்த பிறகு பிரணவ் தனிமைப்படுத்தப்படுவதைப் பார்த்து அவரது பெற்றோர் கவலைப்பட்டனர். அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவரை குழுவாக இருக்கும் விளையாட்டில் சேர அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து மருத்துவரின் பரிந்துரையின் படி, ஓட்டப்பந்தயத்தில் இருந்து கிரிக்கெட்டுக்கு பிரணவ் ராகவேந்திராவை கொண்டு வந்தோம் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

வேகம் என்றால் பிரணவ் ராகவேந்திராவுக்கு விருப்பம்

கிரிக்கெட் பக்கம் வந்தாச்சி.. முடிந்தவரை வேகமாக பந்து வீச வேண்டும் என பிரணவ் ராகவேந்திரா முடிவு செய்துள்ளார். ஏனென்றால் அவருக்கு வேகம் என்றால் விருப்பம். அதற்காக துல்லியம் மற்றும் உடற்தகுதியின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொண்டு செயல்பட்டுள்ளார். 

16 வயதில் மணிக்கு 139 கிமீ வேகத்தில்..

பிரணவ் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அங்கு அவர் 16 வயதில் மணிக்கு 139 கிமீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வரும் மாதங்களில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீசும் வலிமை அவருக்கு இருக்கும் என்று பிரணவ்வுக்கு நெருக்கமானவர்கள் நம்புகிறார்கள்.

தமிழ்நாடு அணிக்காக விளையாடிய பிரணவ் ராகவேந்திரா 

2024 ஆம் ஆண்டில் அசாம் மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு எதிராக தமிழ்நாட்டிற்காக இரண்டு முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் தற்போதைய சீசனில் திருப்பூர் தமிழன்ஸ் அணியிலும் அவர் விளையாடி வருகிறார். 

பிரணவ் ராகவேந்திரா நேர்காணல்

பிரணவ் ராகவேந்திரா ஒரு நேர்காணலில், "எனக்கு வேகம் பிடிக்கும். வேகமாக பந்து வீச விரும்புகிறேன். பவுன்சர்களால் பேட்ஸ்மேன்களை பயமுறுத்துவதும், அவர்களின் கையுறைகளில் கடினமான நீள பந்துகளை வீசுவதும் எப்போதும் நன்றாக இருக்கும். இதைத் தொடர்ந்து செய்ய, துல்லியம் உட்பட பல அம்சங்களில் நான் பணியாற்ற வேண்டும், வேகமாக பந்து வீச, உடற்தகுதி எனது முதல் முன்னுரிமையாக இருப்பதை நான் உறுதி செய்ய வேண்டும், இதற்காக நான் சரியான விஷயங்களைச் செய்வதன் மூலம் என்னை கவனித்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க - குஜராத் விமான விபத்து: கோலி, ரோகித், பாண்டியா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்!

மேலும் படிக்க - இந்திய அணியின் பயிற்சியாளராக தோனியால் ஆக முடியாது! என்ன காரணம் தெயுமா?

மேலும் படிக்க - 'கேப்டனாக அறிவித்திருப்பேன்'.. விராட் கோலிக்கு குறித்து உருக்கமாக பேசிய ரவி சாஸ்திரி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News