WTC Final: ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா - பிளேயிங் லெவன், பலம், பலவீனம் என்ன?

WTC Final 2025 Preview: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் நிலையில் இரு அணிகளின் பலம், பலவீனம், பிளேயிங் லெவன் ஆகியவை குறித்து இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 10, 2025, 07:54 PM IST
  • நாளை முதல் இறுதிப்போட்டி நடைபெறும்.
  • இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
  • தினமும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கும்.
WTC Final: ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா - பிளேயிங் லெவன், பலம், பலவீனம் என்ன?

WTC Final 2025 Preview: 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதிப்போட்டி நாளை (ஜூலை 11) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உடன் தென்னாப்பிரிக்கா அணி மோதும் இந்த இறுதிப்போட்டி ஜூலை 11ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதிவரை இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கும். புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

Add Zee News as a Preferred Source

WTC Final 2025: இரு அணிகளும் பிளேயிங் லெவன் அறிவிப்பு

இந்த போட்டிக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. சாம்பியன்ஷிப்பை ஆஸ்திரேலியா தக்கவைக்குமா அல்லது தங்களது நீண்ட நாள் கனவான ஐசிசி கோப்பையை அடித்து தென்னாப்பிரிக்கா அதன் Choker பட்டத்தை தூக்கி எறியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த சூழலில் இரு அணிகளும் தங்களின் பிளேயிங் லெவனை இன்றே அறிவித்துவிட்டன. இரு அணிகளின் பிளேயிங் லெவனை இங்கு காணலாம். 

ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், கேம்ரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஜாஷ் ஹேசில்வுட்.

தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரெய்ன், மார்கோ யான்சன், கேசவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி

WTC Final 2025: ஆஸ்திரேலியாவின் ஓபனிங்

டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்து 17 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், உஸ்மான் கவாஜா உடன் களமிறங்கும் மற்றொரு ஓப்பனர் யார் என்பது உறுதியாகாமலேயே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி டிராவிஸ் ஹெட்தான் ஓப்பனிங்கில் வருவார் என தெரிகிறது. கிரீன் மற்றும் வெப்ஸ்டர் ஆகிய இரண்டு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் உடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. எனவே ஹெட் டாப் ஆர்டருக்கு போவதே சரியானது.

WTC Final 2025: பலமான ஆஸ்திரேலியா

ஓப்பனிங்கை தொடர்ந்து லபுஷேன், ஸ்மித் ஆகியோர் கனகச்சிதமாக விளையாடுவார்கள். அடுத்து இரண்டு ஆல்ரவுண்டர்களுக்கு பிறகு அலெக்ஸ் கேரி வருவார். அதன்பின் மும்மூர்த்திகளான கம்மின்ஸ் - ஸ்டார்க் - ஹேசில்வுட் ஆகியோர் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார்கள். வழக்கம்போல் நாதன் லயானும் அவருக்கு கொடுக்கப்படும் பணியை செவ்வென செய்வார். ஆஸ்திரேலியா மிக பலமாக தென்படுகிறது. டிராவிஸ் ஹெட், லபுஷேன் பார்ட் டைம் பந்துவீச்சிலும் உதவுவார்கள். பலவீனம் என்றால் நீண்ட நாளுக்கு பின் டெஸ்ட் போட்டி விளையாடுவது வேண்டுமானால் சொல்லலாம்.

WTC Final 2025: தென்னாப்பிரிக்காவின் ஓபனிங்

எய்டன் மார்க்ரம் - ரிக்கில்டன் ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு ஓபனிங்கில் வருவார்கள். இவர்கள் ஆஸ்திரேலிய மும்மூர்த்திகளை தாக்குப்பிடிப்பார்களா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. இவர்கள் தாக்குப்பிடிக்காவிட்டால் வெற்றிப் பெறுவது கடினம். ஒருவேளை இவர்கள் தாக்குப்பிடித்துவிட்டால் நிச்சயம் தென்னாப்பிரிக்காவுக்கு நல்ல வாய்ப்பு உண்டாகும். 

இதன்பின்னர், முல்டர், ஸ்டப்ஸ், பவுமா, பெடிங்ஹாம், வெர்ரெய்ன் என அனுபவமற்ற மிடில் ஆர்டர் தான் பெரிய தென்னாப்பிரிக்காவுக்கு பெரிய சிக்கலே. இவர்களில் யார் பொறுப்புடன் விளையாடப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். நம்பர் 8இல் மார்கோ யான்சன் வரை பேட்டிங் இருப்பது ஆறுதல். பேட்டிங்கை பொறுத்தவரை மார்க்ரம், ரிக்கில்டன், பவுமா மூன்று பேரையே தென்னாப்பிரிக்கா பெரியளவில் நம்பியிருக்கிறது. 

ரபாடா, இங்கிடி பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள். யான்சன் புதிய பந்திலும் மிரட்டுவார். முல்டரும் மீடியம் பேஸ் போடுவார். இடதுகை ஸ்பின்னராக கேசவ் மகாராஜும், வலதுகை ஸ்பின்னராக மார்க்ரமும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பேலன்ஸாக தென்னாப்பிரிக்கா இருந்தாலும் இளம் அணியாக இருப்பது மட்டுமே பலவீனம் எனலாம்.

மேலும் படிக்க | 2025ல் இதுவரை ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்கள்! அவர்களின் வயது என்ன?

மேலும் படிக்க | இந்த 3 வீரர்கள் டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார்கள்.. ராபின் உத்தப்பா!

மேலும் படிக்க | 29 வயதில் ஓய்வை அறிவித்த பிரபல வீரர்! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News