இங்கிலாந்து தொடரில் இந்த 3 வீரர்கள் தான் மிகவும் முக்கியம்! யார் யார் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் பயிற்சியில் உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jun 8, 2025, 11:52 AM IST
  • இந்த மாதம் தொடங்கும் டெஸ்ட் தொடர்.
  • இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம்.
  • 20ம் தேதி டெஸ்ட் தொடங்குகிறது.
இங்கிலாந்து தொடரில் இந்த 3 வீரர்கள் தான் மிகவும் முக்கியம்! யார் யார் தெரியுமா?

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளுக்காக காத்துக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. காரணம் இவர்கள் இருவரும் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் இளம் இந்திய அணி இங்கிலாந்தில் விளையாட உள்ளது. இந்த தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று வீரர்களை பற்றி பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | லக்கியான 7 இந்திய வீரர்கள் இவர்கள் தான்... ஏன் தெரியுமா?

பிரசித் கிருஷ்ணா 

ஐபிஎல் 2025-ல் பிரசித் கிருஷ்ணா முற்றிலும் ஒரு மாறுபட்ட பவுலராக இருந்தார். அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். 15 போட்டிகளில் விளையாடி கிட்டதட்ட 25 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் பிரசித் கிருஷ்ணா. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா இதற்கு முன்பு மொத்தமாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இங்கிலாந்து போன்ற மைதானங்களில் உயரமான பவுலர்கள் நல்ல பவுன்சர்களை வீச முடியும். அந்த வகையில் பிரசித்தி கிருஷ்ணா அதிகம் உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டு விக்கெடுகளை மட்டுமே வீழ்த்தியுள்ள பிரசித் கிருஷ்ணா இந்த தொடரில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

சாய் சுதர்சன் 

ஐபிஎல் 2025-ல் தனி ஒருவராக நிறைய போட்டிகளை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வென்று கொடுத்துள்ளார் சாய் சுதர்சன். 23 வயதே ஆகும் தமிழகத்தை சேர்ந்த சாய் சுந்தர்சன் இந்த ஆண்டு 15 போட்டிகளில் விளையாடி 759 ரன்கள் குவித்துள்ளார். இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓப்பனிங் வீரரான இவர் ரோகித் சர்மாவின் இடத்தை பிடிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரு முக்கியமான வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருந்து வருகிறார். ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ரன்களை குவித்து வந்தது. தற்போது ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஜெய்ஸ்வால் அவரது இடத்தை இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 2023 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 36 இன்னிங்சில் 1798 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும், 10 அரை சதங்களும் அடங்கும்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2025 தொடரில்... பதிவான 5 தனித்துவமான சாதனைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News