)
Sweden vs Tunisia FIFA World Cup 2026: பிபா உலகக் கோப்பை தொடர் ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய முதல் போட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. அப்போட்டியில் ஐவரி கோஸ்ட் மற்றும் ஈக்வடார் அணிகள் மோதின. இதில் ஈகவடா அணி ஆட்டத்தின் கடைசி வரை கோல் அடிக்காத நிலையில், ஜவரி கோஸ்ட் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.
இதையடுத்து, காலை 7.30 மணிக்கு ஸ்வீடன் மற்றும் துனிசியா அணிகள் மோதிக்கொண்டன. மெக்சிகோவில் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்வீடன் அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் யாசின் அயாரி கோல் அடித்து கணக்கை தொடங்கி வைக்கிறார். அதன்பின் 30 வது நிமிடத்தில் அலெக்சாண்டர் இசாக் கோல் அடித்து ஸ்வீடன் கோல் கணக்கை 2 ஆக உயர்த்தினார்.
இதையடுத்து முதல் பாதியின் கடைசி நேரத்தில் அதாவது 43 வது நிமிடத்தில் துனிசியா வீரர் ஓமர் ரெகிக் கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் 2-1 என்ற கணக்கில் ஸ்வீடன் அணி முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து ஸ்வீடன் அசத்த, துனிசியா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதன் மூலம் ஸ்வீடன் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றது. ஸ்வீடன் வீரர் யாசின் அயாரி கூடுதல் நேரத்தில் மற்றொரு கோல் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
குரூப் Fல் இருக்கும் ஸ்வீடன் அணி இந்த வெற்றியின் மூலம் அந்த குரூப்பில் முதல் இடத்தை தன்வசம் ஆக்கி உள்ளது. மற்ற அணிகளான ஜப்பான், நெதர்லாந்து தலா 1 புள்ளியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. துனிசியா அணி தோல்வி அடைந்ததால் ஒரு புள்ளி கூட பெறாமல் அந்த குரூப்பின் கடைசி இடத்தில் உள்ளது.
பிபா உலகக் கோப்பை தொடரில் நாளை (ஜூன் 16) மூன்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
முதல் போட்டி: பெல்ஜியம் vs எகிப்து (நள்ளிரவு 12.30 மணி) சியாட்டில் மைதானம்.
இரண்டாவது போட்டி: செளதி அரேபியா vs உருகுவே (அதிகாலை 3.30 மணி) மியாமி மைதானம்.
மூன்றாவது போட்டி: ஈரான் vs நியூசிலாந்து (காலை 6.30 மணி) லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானம்.